பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

781


துய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்ன தன்மைத்து என அறிய வொண்ணாததாயுள்ள சிவமாகிய அம்முழுமுதற் பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளி வந்தது. அம்முதற்பொருள் தானே வலியவந்து மெய்யுணர்வை வழங்கியருளியது” என்பது இதன் பொருளாகும்.

அகளம் - அருவம், என்றது, உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கும் பேரறிவினை சகளம் - உருவம், என்றது, குருவாகி வந்து அறிவிக்கும் திருமேனியை, யாரும் அறிவரிது அப்பொருள் என்றது, தன்னைக் கூடினவர்களாலும் கூடாதவர்களாலும் இன்னதன்மையதென அறிய வொண்ணாத சிவபரம்பொருளை. தானாகத் தருதல் பிறிது காரணமின்றித் தன் அருளே காரணமாக எளிவந்து வலியக் கொடுத்தல், தானாக’ என்பதற்குச் சிவமேயாக’ எனப் பொருளுரைத்தலும் உண்டு. தருதல் - ஞானத்தைத் தருதல்,

இறைவன் குருவாகத் திருமேனி கொண்டு எழுந்தருளி மெய்ப்பொருளை உபதேசித்தருளுதலாலேயே உபதேச பரம்பரையில் ஆகமப் பயிற்சியும் சமயவொழுக லாறுகளும் யோகம் முதலிய நெறிமுறைகளும் உலகத்து நிலைபெற்று வழங்கி வருகின்றன என இறைவன் குருவாய் எழுந்தருளுதலின் இன்றியமையாமையை விரித்துரைப்பது,

“ஆகமங்கள் எங்கே அறுசமயந்தானெங்கே

யோகங்களெங்கே யுணர்வெங்கே பாகத் தருள்வடிவத்தானுமாயாண்டிலனேலந்தப் பெருவடிவை சாரறிவார் பேசு” (5)

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். இது,

"நானும் என்சிந்தையும் நாயகனுக்கெவ்விடத்தோம்

தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்"

எனவும்,

←Ꮛ -- - - 4. * * - - நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்

- - - - ... ?? வானோர் பிரான் என்னை யண்டிலனேல்