பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவும் வரும் திருவாதவூரடிகள் அனுபவமொழிகளை அடியொற்றியமைந்ததாகும்.

சிவானுபவம் இன்னதன்மைத்தெனச் சொல்லால்

வெளியிட்டுரைக்கவொண்ணாதது என்பதனை,

“தடக்கையினெல்லிக் கணியெனக் காயினன்

சொல்லுவதறியேன் வாழிமுறையோ

தரியேன் நாயேன் தான்னனைச் செய்தது

தெரியேன்............ என்னிற்

கருணை வான்தேன்கலக்க

அருளொடு புராவ முதாக்கினன்' (திருவண்டப்பகுதி)

எணவருந்தொடரில் அதனையு ளர்ந்தோராகிய மணிவாசப் பெருமான் குறித்துள்ளார். இக்குறிப்பினை அடியொற்றி யமைந்தது,

“எங்ங்னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்

அங்ங்னிருந்ததென்றுந்தீபற

அறியும் அறிவதன்றுந்தீபற” (4)

எனவரும் திருவுந்தியாராகும்.

சிவபூசனையில் ஈடுபட்டிருந்த சண்டீசப்பிள்ளையார் (சிவபூசைக்குரிய பாற்குடத்தைக் காலால் இடறிய எச்சதத்தனைக் கொல்லுதல்) ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்றான கொலையென்றும் அதனைச் செய்தல் பழியுடைய செயலாம் என்றும் சிறிதும் எண்ணிப் பாராமல், தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையும் தனக்கு மறை ஒதுவித்த வேதியனும் குருவும் ஆகிய அவனுடைய இரண்டு கால் களையும் வெட்டி வீழ்த்திடக்கண்டு இறைவன் சண்டீச நாயனாரது வல்வினையின் திறத்தால் சிவமாந் தன்மைப் பெரும்பதத்தினை அவர்க்கு வழங்கியருளினார் என்னும் மெய்ம்மை நிகழ்ச்சியினைக் கண்டுணர்ந்தனையல்லவா என மாணவனை நோக்கி வல்வினையின் திறம் கூறுவதாக அமைந்தது,

  1. & - * - -

பாதகமென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும்- சேதிப்பக்