பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆடல்புரியும் கூத்தப்பெருமானைக் கண்டு கும்பிடுவாயாக. அங்கே அப்பரம்பொருள் வெளிப்பட்டுத் தோன்ற ஐம்புல வழியாகிய சிறுநெறியிற் செல்லாது திருவருளாகிய செந்நெறியில் நிலைத்து நிற்பாயாக’ என்பது இதன் பொருளாகும். இறைவன் திருவடியிலுள்ள சிலம்பும் அதன் கண் இருந்து தோன்றும் ஓசை ஒலியும் முறையே பரவிந்தும் பரநாதமும் ஆகும் என்பர். திருவடிச் சிலம்பொலி அகஞ் செவிக்குப் புலனாகும் நிலையில் ஓசை எனவும் உயிருனர் வுக்குப் புலனாகும் நிலையில் ஒலி எனவும் பெயர் பெறும். 'ஒசையொலியெலாம் ஆனாய் நீயே’ எனப் போற்றுவர் தாண்டகவேந்தர். திருச்சிலம்போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடுதலாவது, உலக ஆரவாரத்தினின்றும் நீங்கி அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானமேயுருவாகத் திகழும் இறைவனைத் தமது நெஞ்சத்தாமரையினுட் சென்னியிலும் வைத்து வழிபடுதல். அங்ங்னம் வழிபடும் சிவயோகியர்க்குத் திருவருள் மயமான பத்துவகை நாதம் அகத்தே தோன்றும் எனவும் தற்போதங் கெடத் திருவருளின் ஒசையொலி வழியே கும்பிடுவார்க்குக் கூத்தப்பெருமான் நேர்படத் தோன்றியருள்வன் எனவும், இங்ங்னம் சிலம்பொலி கேட்டல் அவனருள் வழி நிற்போர்க்கே இயலும் ஏனையோர்க்கு இயலாது எனவும் அறிவுறுத்துவது.

“மணிகடல் யானை வார்குழல் மேகம்

மணிவண்டு தும்பி வளைபேரிகையாழ் தனித்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே' (606)

எனவரும் திருமந்திரமாகும். “மணி, கடல், யானை இசை வளர்தற்கு இடனாகிய வேய்ங்குழல், மேகம், நீலமணி போலும் நிறமுடைய வண்டு, (தேன் நுகரும்) தும்பி, வளை (சங்கு) பேரிகை, யாழ் என மிகவும் நுண்ணியவாய் மெல்லிய வாய்த் தோன்றுகின்ற இப்பத்துவகை நாதங்களும் இறைவனைப் பணிந்து போற்றும் தியானநிலையிலுள்ள செம்புலச் செல்வர்க்கல்லது ஏனையோரால் செவிப் புலனாகக் கண்டுனுர்தல் இயலாது” என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.