பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சிவபெருமான் வழங்கிய பேரானந்தமாகிய திருவருளின்பத் தைத் தூய தாமரை மலர் போலும் திருவாயிலிருந்து வெளிப்படும் அழகிய சொற்களால் திருவாசகப்பனுவலாக அருளிச்செய்து, வஞ்சனையை விளைக்கும் பிறவித் துன்பத்தை நாம் அறியாவண்ணம் நம்மனோர்க்கு நன்னெறி காட்டிய பெருந்தகையார் திருவாதவூரடிகள் ஆவர். இவ்வுண்மையை,

"பாய்பரியோன்தந்த பரமானந்தப்பயனைத்

தூய திரு வாய்மலராற் சொற்செய்து - மாயக் கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய் திருவாதவூராளுந்தேன்”

எனவரும் திருக்களிற்றுப்படியார் விரித்துரைத்தல் காணலாம்.

"அதுவென்றும் இதுவென்றும் ஒருபொருளைச் சுட்டியறிதலின்றி எல்லாவற்றையும் ஒருங்கேயறியும் பேரறிவுப் பொருளாகிய அதுவே, இவ்வாறு ஆன்மாவின் பக்குவகாலத்து இத்தகைய மானிடவுருத்தாங்கிக் குருவாய் எழுந்தருளியது என்று உணர்வாயாக. அப்பரம்பொருள் எங்கும் விரிந்த ஞானமாகிய சடையையுடைய சிவபெருமானே எனத்தெளிய உணர்வாயாக’ என

அறிவுறுத்துவது,

“அதுவிது வென்னாதனைத்தறிவாகும்

அதுவிது வென்றறிந்துந் தீபற அவிழ்ந்த சடையானென்றுந் தீபற” (36)

எனவரும் திருவுந்தியாராகும். அனைத்தறிவாகும் அது என்றது சிவபரம்பொருளை. இரண்டாமடியில் இது என்றது குருவாக வந்த திருமேனியை. அதுவே இது என்புழி சிவமே குருவாக வந்தது என்னும் தேற்றேகாரம் வருவித்துரைக்கப் படும்.

"அது பழச்சுவையென அமுதென அறிதற்

கரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன்திருவுரு. இவன் அவன் எனவே