பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆன்மா தன் முயற்சியாற் சிவமாதல் இயலாது சிவனது அருளாலேயே ஆன்மா சிவத்தோடுங்கூடி இரண்டற நிற்கும் என்பது சைவசித்தாந்த மெய்ந்நூல்களின்

"அவனிவனான தவனரு ளாலல்ல

திவனவனாகா னென்றுந் தீபற என்றும் இவனேயென்றுந்தீபற”

எனவரும் திருவுந்தியார் இவ்வுண்மையினைத் தெளிவு படுத்துவதாகும். இங்கு அவன் என்றது மாற்றமனங்கழிய நின்ற இறைவனை. இவன்’ என்றது ஆன்மாவை. அம்முதல்வனாகிய சிவன் இவ்வான்மாவாகத் தான் பிரிவற நின்ற சிவமாகிய நிலை அம்முதல்வனது எல்லையற்ற அருள்காரணமாக வுளதாவதல்லது, ஆன்மாவாகிய இவன் சிவனாகிய முதல்வனாக மாட்டான். எக்காலத்தும் இவ்வான்மா சிவனுக்கு அடிமையாகவுள்ளவனே என்னும் உண்மையினைத் தெளிந்துணர்வாயாக என்பது, இத்திரு வந்தியாரின் பொருளாகும். “சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கி” எனவரும் சிவபுரனத்தொடர் இங்குச் சிந்திக்கத் தகுவதாகும்.

வேதம் 'ஏகம் என ஒன்றையே குறிப்பிடுதலால் முழு முதற்பொருள் ஒன்றே உள்ளது, ஏனைய உயிரும் உலகமும் வெறுந்தோற்றமே என்பர் ஒரு பொட்கொள்கையாளர். அன்னோர் கருதுமாறு முழுமுதற்பொருள் ஒன்றையே குறிக்க வேண்டின் அதனை 'ஏகம்’ என்ற சொல்லினாலேயே கூறுதல் அமையும். இனி, இருபொருட் கொள்கையாளர் கருதுமாறு முழுமுதற்பொருளும் உயிரும் தனித்தனி வேறாய் நிற்பின் துவிதம் என்ற சொல்லாற் சொல்லலாம். அவ்வாறன்றி ஏகம் எனக் குறித்த வேதம் ஏகம் அத்துவித்யம் என அத்துவிதம் என்ற சொல்லாலும் இணைத்துக் கூறுகின்றது. வேதத்துள் வரும் அத்துவிதம் என்ற சொற் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால், இறைவன் ஒன்றாயும் இரண்டாயும் நில்லாமல் உயிர்களோடு பிரிப்பின்றி உடனாய் நிற்றலால் அங்ங்னம் இரண்டறக் கலந்து நிற்றலாகிய நிலையினை வடமொழியில் அத்துவிதம் என்ற சொல்லாற்.