பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

797


குறித்தனர் சான்றோர். உலகுயிர்களோடு இறைவனுக்குள்ள இத்தொடர்பினை இருமையின் ஒருமை’ எனக் குறித்தருளுவர் ஆளுடையபிள்ளையார். "சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் ஆன்மா” என்பது மாண்டுக்கிய உபநிடதம். அத்துவிதம் என்று சொல்லுக்கு ஏகம் ஒன்று) என ஒருசாராரும், துவிதம் (இரண்டு) என மற்றொரு சாராரும் பொருள் கொண்டனர். "ஒன்றும் இரண்டும் ஆகா இரண்டற்ற தன்மை” என இதற்கு உண்மைப்பொருள் கண்டார் மெய்கண்டார். இங்ங்ணம் ஒன்றெனலும் ஆக்ாமல் இரண்டெனலும் ஆகாமல், தூயநல்லுயிர்கள் சிவத்தோடு இரண்டறக் கலந்து சிவமாந் தன்மையாய் அடங்கி ஒன்றாகும் வீடு பேற்றின் நிலையே சிவமாதல்’ என்னுந்தொடரால் அறிவுறுத்தப்பெறுகின்றதென்பது சைவ சித்தாந்த மெய்ந் நூற்கொள்கையாகும். இம்முடியினைத் தெளிவுபடுத்தும் நிலையில் அமைந்ததே,

  • % - . A - * - o

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து சிவமானவா.பாடி’

எனவரும் திருவாசகத்தொடராகும். இறைவன் அருளாற் பெற்ற சிவஞானத்தால் உள்ளந்தெளிவடையாதவர்கள் இத்தகைய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வைப் பெற மாட்டார்கள் என்பதனை,

"தெளிவறியாதார் சிவமாகமாட்டார்” (1480)

எனவரும் திருமந்திரத்தொடரால் திருமூலதேவ நாயனார் அறிவுறுத்தியுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்.

"நிலநீர் நெருப்புயிர் நீள்விகம்பு நிலாப்பகலோன்

புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப்புணர்ந்து

நின்றான் உலகேழெனத் திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவாதோனோக்கம் ஆடாமே” (5)

எனவரும் திருப்பாடல், இறைவன் ஐம்பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆன்மா ஆகிய எல்லாப்பொருள்களிலும் பிரிவின்றிக் கலந்து விளங்குந் திறத்தினை விரித்துரைப்பதாகும்.