பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

801


“நின்திருவருளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்ற இக்காலத்தே அடியேற்கு நின் திருவருளை வழங்கி, என்னை மறைத்துள்ள ஆணவ இருளை அகற்றிப் பளிங்கனைய) என்னுள்ளத்தின்கண்னே எழுந்து தோன்றும் கதிரவனைப் போன்று, (என் உள்ளும் புறம்புமாக யாண்டும் நிறைந்து) நிற்கும் நின் இயல்பினை ச் சுட்டுனர்வினால் வேறாக வைத்துனரும்) நினைப்பு முற்றும் நீங்க நின் அருளின் வண்ணமாய் ஒன்றியிருந்து) நினைப்பேனாயினேன். (அங்ங்னம் நினைத்த அளவிலே, என்னை அகத்திட்டுக் கொண்டு விளங்கும் நின்னையன்றி (மாயா காரியமாகிய பொருள்களுள் ஒன்றும் இல்லையென்னும்படி உலகெலாம் ஆகியாண்டும் பரவிச் சென்று அணுவினும் மிக நுண்ணிய னாய் உலகுயிர்கள்தோறும் ஊடுருவி மறைந்து இங்ங்ணம் உள்ளும் புறம்புமாய் யாண்டும் நீக்கமற நிறைந்து யாவும் ஒன்றாய்ப் பிரிவின்றி விளங்கும் திருப்பெருந்துறைப் பெருமானே, (நீ இவ்வாறு உலகெலாமாகி நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றுள் ஒன்றினுந் தோய்வின்றியுள்ளாய். ஆதலால்) நீ அவற்றுள் ஒன்றும் ஆவாயல்லை. (உலகுயிர்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்வோன் நீயேயாதலின் நின்னையன்றி அவற்றுள் ஏதொன்றும் இல்லை. (மும்மலப் பிணிப்புற்று வருந்தும் இக் கட்டு நிலையில் நின்னைத் தம்மின் வேறாகக் காண்பார்க்கு அவர் காணும் காட்சியுள்ளாகவே நீ புலப்படாது மறைந்து நிற்றலின் அன்னோர் நின்னை உள்ளவாறு காணுதல் இயலாது. இனி நினது அருளாற் பாசப்பிணிப்பினின்றும் விடுபட்டு நின்னருள் வழி நின்று காணும் சிவஞானிகட்கு மீண்டுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குத லால் அந்நிலையில் நீ வேறு தாம் வேறாய்ப் பிரிந்து நின்று காணுதலும் இயல்வதன்று எனவே யார்தாம் நின்னியல் பினை உள்ளவாறு உணரவல்லார்?”

என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இதன்கண் “சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்” எனவரும் தொடர், "நேரியனாய்ப் பிரியனுமாய்', உலகெலா மாகி வேறாய் உடனுமாய் நிற்கும் இறைவனது இயல்பினை உணர்த்துவதாகும். இந்நுட்பம்,

சை, சி. கா. வ. 31