பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"திரண்டாம் பயனெனுந் திருவருள்தெளியிற்

சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றும் என்றிறையியற்கையியம்புதல்”

எனத் திருவாதவூர் நயினார் கர்த்தாவினுடைய தன்மையை அருளிச் செய்தது எனவரும் உரைக்குறிப்பாலும் உய்த்துணரப்படும்.

இறைவனது திருவருளுக்கு உரியராகிய சிவஞானிகள் முதல்வனுடன் பிரிப்பின்றி ஒன்றியுடனாம் முத்திநிலையில் முதல்வனும் உளன், அம்முதல்வனோடு ஒன்றிச் சிவானந்தம் நுகரும் உயிரும் உளது, முன்னர் உயிரைப்பற்றி நின்று பின்னர் விலகிச் செயலற்று அடங்கிய மலமாயை கன்மங் களும் உள்ளன. முன்பெல்லாம் உயிரை இறுகப்பிணித்து நின்ற மும்மலப் பிணிப்பு அவ்வுயிரைவிட்டு நீங்கினமையால் உயிரானது முதல்வனது திருவருளில் மூழ்கி அவ்வருளே மேற்பட்டுத் தோன்றத்தான் அதன்கண் பிரிவற இயைந்து பேரின்பம் நுகர்ந்திருக்கும். அவ்வளவே அவ்வுயிரின் முன்னைய கட்டு நிலைக்கும் பின்னைய வீட்டு நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடாகும்.

'இன்றெனக்கருளி எனவரும் இத்திருவாசகத்தின் பொருள்நுட்பத்தையுணர்ந்து சிவஞானம் பெற்ற நல்லுயிர் தன்முனைப்படங்கி இறைவனது அருள்வழியடங்கி ஒற்றித்து நிற்கும் திறத்தினை அறிவுறுத்துவது,

"அவனே தானேயாகிய அந்நெறி

ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே” (சிவகு 10)

எனவரும் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரமாகும். “இறைவன் உயிர்களின் கட்டுநிலையில் அவற்றோடுங்கூடி நின்று காரியப்படுத்தும்பொழுதே தானொரு முதல் இல்லை யெனும்படி தோன்றாமல் நின்று காரியப்படுத்தினாற் போன்று, உயிராகிய நீயும் சிவனது ஞானத்தினாலல்லவோ காரியப் டு வருகிறோம் என்பதையுர்ந்து, ஆன்மபோதம் இவியாமல் அருள் வழி அடங்கி நிற்பாயாக’ என அறிவுறுத் து வது, இச்சூத்திரமாகும். உயிர் தன்னைப் பற்றியுள்ள மும்மலப்