பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

803


பிணிப்பு அற்று நீங்கும்பொருட்டு அவற்றின் இயல்போடு ஒன்றுபட்டு நில்லாது சிவத்தின் இயல்போடு ஒன்றியிருந்து அதுவே தானாய் நிற்கும் பயிற்சியினை, இடையறாது மேற் கொள்ளுதல் வேண்டும். இடையறாது நிகழும் அப் பழக்கத்தினால், உயிரைப் பற்றியிருந்த மலத்தினியல்பு அதனை விட்டு நீங்க, உயிர் செம்பொருளாய சிவத்தின் இயல்பில் அடங்கி நிற்கும். மலம் அறுதற்பொருட்டுச் செயற் பாலதாய இப்பயிற்சியினை,

“தானவனாகும் சமாதிகை கூடினால்

ஆனமலமறும் அப்பகத் தன்மைபோம்” (2320)

என வரும் திருமந்திரத்தில் திருமூலநாயனார் அருளிச் செய்துள்ளார்.

இறைவன் திருவருளிலே உறைத்து நிற்பார்க்குப் புறத்தேயுள்ள புறப்பொருள்களைப் பற்றிய உணர்வும் தம்மோடு உடனாய் நிற்கும் உடம்பைப் பற்றிய உணர்வும் தமக்கு அகக்கருவிகளாயமைந்த மனம் முதலியவற்றைப் பற்றிய உணர்வும் உயிராகிய தான் ஒருபொருள் உண்டு என எண்ணுந் தன்னைப்பற்றிய உணர்வும் நிகழாத வண்ணம் அவையனைத்தும் மறக்கப்பட்டு மறைந்தொழிதல் இயல்பாதலின், இறைவன் திருவருளால் மலமாயை கன்மங்களின் பிணிப்பு நீங்கியபொழுதே அவற்றோடு உட னிகழும் இவ்வுணர்வுகளும் அணுவணுவாய்த் தேய்ந்து ஒழிவன என்னும் உண்மையினை,

§ {

வான்கெட்டு மாருதமாய்த் தழல்நீர் மண்கெடினுந் தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென் உள்ளமும்

போய்

நான்கெட்ட வாபாடித்தெள்ளேனம் கொட்டாே ເor”

எனவரும் திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தமது சிவானுபவத்தில் வைத்துத் தெளிய விளக்கியுள்ளார். பாசப்பிணிப்பினின்றும் விடுபட்டு இறைவனது திருவருளில் ஒன்றுபட்டுத் திளைத்தலாகிய முத்திநிலைக்கண் சிவானுபவம் ஆகிய இதனை,