பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

805


இருதிறப்பட்டுச் சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் இயல்பாகும். புறப்பொருள் நோக்கினதாய உலகியல் நிலையும் பரமே பார்த்திருக்கும் அகப்பொருள் நோக்கும் ஆகிய இருவகை நோக்கினையும் உணர்த்தும் நிலையில் அமைந்தது,

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை - பரத்தை மறைந்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே (திருமந்திரம் 2290)

எனவரும் திருமூலர் வாய்மொழியாகும். ஆன்மாவானது சார்ந்ததன் வண்ணமாந்தன்மையது என்பதனை,

"நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்பதாகும் அறிவு” (திருக்குறள்.452)

எனத் திருவள்ளுவனார் பொதுமுறையிலும்.

"யாதொன்று பற்றின் அதன் இயல்பாய்நின்று

பந்தமறும் பளிங்கனைய சித்துநீ” (ஆகாரபுவனம்-சிதம்பர)

எனத் தாயுமானார் சிறப்புமுறையிலும் வைத்து அறிவுறுத்தி யுள்ளமை இங்கு நினைக்கத்தக்கதாகும்.

சிவவுணர்வாய் நிற்றல் என்பது மலமாயை கன்மங் களில் ஒன்றினிடத்தும் ஒருசிறிதும் நினைவுசெல்லாமல் உயிராகிய தன்னையும் நினையாமல் சுட்டுணர்வு நீங்கச் சிவம் ஒன்றையே நினைந்திருத்தல். இங்ங்னம் சிவவுனர்வில் தலைப்பட்டிருக்கும் உயிர் இறைவனது திருவடி ஞானத்தால் சிவமேபெறுந் திருவுடையதாகத் திகழுந்திறத்தினை,

"திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும்” (திருமந்திரம் 1598) எனவரும் தொடரில் திருமூலநாயனார் தெளிவாக விளக்கி யுள்ளார்.

"தற்சேட்டை கெட நின்றதே சிவாநுபவம்” என்பதற்குப் பிரமானம் தேவாரத்தில் "தன்னை மறந்தாள் தன்னாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்