பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

809


இறைவனது இயல்பினை இத்திருப்பாடலால் விளக்கிய திறம் நினைந்து போற்றத்தகுவதாகும். இறைவன் தன்னை அன்பினால் நினைந்து போற்றும் மெய்யடியார்க்கு அருள்செய்தல் கருதி அவரவர் விரும்பிப் போற்றும் பல்வேறு திருவுருவங்கொண்டு தோன்றியருள்புரிவன் என்பதும், இங்ங்னம் பலவேறு திருவுருவங்களையுடையனாயினும் இறைவன் ஒருவனே என்பதும் உணர்த்துவார்,

"உருவு பலகொண்டுனர்வரிதாய் நிற்கும் ஒருவன்” (கைலைபாதி) என்றார் நக்கீரதேவர். தான் ஒருவனுமே பலவாகி நின்றவா’ என வரும் திருவாசகம் இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

சொல்லும் பொருளும் போலவும் உடலும் உயிரும் போலவும் மலரும் மணமும் போலவும் எல்லாப் பொருள் களிலும் அத்துவிதமாய்க் கலந்து விளங்குகின்றான் என்பதும், எனினும் மக்கள் தம் ஐம்புலன்களாற் பற்றியுணர்தற்குரிய நிலையின்றி ஒன்றினுந் தோய்வின்றிப் புலனுணர்வுக்கு அப்பாற்பட்டுள்ளான் என்பதும் ஆகிய உண்மையினை,

“உரையும் பொருளும் உடலும் உயிரும்

விரையும் மலரும்போல் விம்மிப்-புரையின்றிச்

சென்றவாறோங்குந்திருக்கயிலை யெம்பெருமான்

நின்றவாறெங்கும் நிறைந்து” (கைலையாதி)

எனவும்,

“நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்

மறைந்தைம்புலன் காணவாராய்” (கைலையாதி)

எனவும் நக்கீரதேவர் விரித்துக் கூறியுள்ளார். ஒருபற்றும் அற்று அருவாய்த்தானே நிற்குந்தத்துவங்கடந்த பொருளாகிய இறைவனை,

"உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமல

ரெழுதருநாற்றம் போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்”