பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

73


பெயரால் தமிழ் முன்னோர் வழங்குவாராயினர். இப்பெயர் வழக்கின் தொன்மையினை,

“முதலெனப்படுவது நிலம்பொழுதி திரண்டின்

இயல்பென மொழிட இயல்புணர்ந்தோரே'

எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணரலாம். இங்கு எடுத்துக்காட்டப்பெற்ற தொல்காப்பியத் தொடர்களின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால், உலகம் என்பது இல்பொருளன்று, காலம் என்னும் பொருளுடன் தொடர்புடையதாய் அடிக்கடி நிலைமாறுமியல்பினதாகிய உள்பொருளே என்பது தொல்காப்பியனார் கொள்கையாதல் நன்கு புலனாகும்.

இவ்வாறு கடவுள் உலகம் என்னும் இருவேறு பொருளுண்மையைச் சுட்டிய தொல்காப்பியனார் இவற்றின் வேறாக உயிர் என்பதனைத் தனித்தன்மையுடைய பொருளாகக் கொண்டு அவ்வுயிர்கள் பலவெனத் தம்நூலுள் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். உயிர்கள் தோற்றமில் காலமாக நிலைபெற்று வரும் தொன்மையுடையன என்பதும் எக்காலத்தும் அழிவில்லன என்பதும் அவைதாம் பெற்றுள்ள பொறிகளின் குறைவு மிகுதிகட்கேற்ப, குறைந்தும் மிக்கும் தோன்றும் பல்வேறு அறிவு நிலைகளையுடையன என்பதும் அழிவில்லன என்பதும் பண்டைத்தமிழர் கொள்கையாகும். உயிர்கள் ஒரு காலத்திற் படைக்கப்பெறாது தோற்றமில் காலமாக (அநாதியாக) உள்ள உள்பொருள் என்பதனைத் 'தொல்லுயிர்’ (தொல், புறத், 17) எனவரும் தொடரில் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். உயிர்கள் அழிவின்றி என்றும் நிலைபேறுடையனவாதலின் அவற்றை “மன்னுயிர் என வழங்குதல் தமிழ் வழக்கு. உயிர்களை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறிவின் திறத்தால் அறுவகையாகப் பகுத்துரைப்பர் தொல்காப்பியனார். எனவே உயிர் என்பது அறிவு என்னும் வெறும் பண்பன்று: அறிதற்பண்பினையுடைய குணிப்பொருளாம் என்பது

21. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 4.