பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யென்னும் உண்மையினைத் தெளிவாக வற்புறுத்துதல் கானலாம்.

உடல்வன்மை படைத்தானொருவனால் முயன்று வீசி எறியப்பட்டு வானத்தின் கண் உயர்ந்து விரைந்து சென்ற கல்லும், வலியில்லாதானொருவனால் மெதுவாக எறியப்பட்டுச் சென்ற கல்லும் நிலத்தின்கண்னே ஒருசேர விழுதலைக் காண்கின்றோம். அதுபோலவே இறைவனது திருநாமமும் தன்னை ஓதுவாராது ஞானத்தின் வன்மை மென்மைகளால் மாறுபடாது தனக்கு ஆதாரமாகிய இறைவனருளால் ஈர்க்கப்பட்டு ஒதுவார் அனைவர்க்கும் ஒப்ப நலம்புரியும் சிறப்புடையது என்னும் உண்மையினை,

"வல்லா னொருவன் கைம்முயன் றெறியினும்

மாட்டா னொருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லே போல்

நலத்தின் வழாஅர்நின் நாமம் நவின்றோரே”

(திருவிடைமருதூர் மும்மணிக்கோவை)

எனவரும் தொடரால் அடிகள் விளக்கிய திறம் வியந்து போற்றத்தக்கதாகும்.

எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்து விளங்கும் இறைவனுக்கு உலகமே உருவமாதலின், அப்பேருருவினை விட்டு விலகி நிற்கும் பொருள்கள் உலகில் இல்லை. எனவே உலகப் பொருள்கள் யாவும் இறைவன் திருவுருவின் அவயவங்களாகவே கொள்ளத் தக்கன. திரிபுரம் எரித்தது, தக்கன் தலையரிந்தது, இந்திரனைத் தோள் நெரித்தது, பிரமன் தலையிலொன்றைக் கிள்ளியது, மன்மதனை எரித்தது, இராவணனை விரலால் அடர்த்தது, கூற்றுவனை யுதைத்தது முதலாக இறைவன் செய்த செயல்க ளெனப் போற்றப் பெறுவனவெல்லாம் இறைவன் உலகத்தை இயக்குங்கால் அவனது அருளினை ஏற்றுக் கொள்ளாதார் தம் வினைவயத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எனக் கொள்வ தல்லது இறைவன்தானே தனக்குப் புகழுண்டாதல் வேண்டி விரும்பிச் செய்த வீரச்செயல்களென மெய்யுணர்வுடையோர் கொள்ளமாட்டார்கள் என்பதனை உருவாம் உலகுக்கு”