பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முக்கணன் என்பது முத்திவேள்வியில் தொக்க தென்னிடையென்பதோர் சுருக்கே வேதமான்மறி யேந்துதல் மற்றதன் நாதன் நானென நவிற்றுமா.ே மூவிலையொருதாட் சூல மேந்துதல் மூவரும் யானென மொழிந்தவாறே எண்வகை மூர்த்தி என்பதிவ்வுலகினில் உண்மையா னென உணர்த்தியவாறே”

எனவரும் ஆறாம் பாடலாகும். திருவெண்காட்டடிகள் இயற்றிய பனுவல்களில் அமைந்த பாடல்கள் யாவும் முன்னைத் திருமுறையாசிரியர்கள் அருளிய அருள் நூல்களை அடியொற்றியனவாய் சைவ சித்தாந்த வுண்மை களைத் தெளிய விளக்குவனவாக அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தகுவதாகும்.

திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் மூத்தபிள்ளையாரைக் குறித்து முதன்முதற் பாடிய இரட்டை மணிமாலையின் முதற்செய்யுள்

“என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியனாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான்”

என்பதாகும். இதன் கண் இறைவன் உயிர்கள் தன்னை நினையுமாறு நினைந்தாலன்றி அவ்வுயிர்கள் அம்முதல்வனை நினைக்குந் திறம்பெறமாட்டா என்னும் உண்மை வலியுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம். 'தன்னை முன்னம் நினைக்கத் தருவான் எனவரும் தேவாரத் தொடர் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்.

உயிரையின்றி யமையாத கண், ஓர் உருவத்தைக் காணுங்கால், உயிரானது கண்ணுடன் பிரிப்பின்றிக் கலந்து நின்று, அவ்வுருவத்தைக் கண்ணுக்குக் காட்டித் தானும் உடனிருந்து காணுமாறுபோல, இறைவனை யின்றியமையாத