பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நீர்மலிவேணியன், அலகு இல்சோதியன் அம்பலத்து ஆடுவான்’ என முழுமுதற்பொருளின் இலக்கணமாகிய பொருளியல்பு உரைத்தலும், 'மலர்சிலம்படி வாழ்த்தி வனங்குவாம்’ என வாழ்த்தும் வணக்கமும் ஒருங்கு அமைந் திருத்தல் காணலாம். இங்கு உலகு என்றது, உயிர்களை, உணர்தல் - மனத்தின் தொழில், அஃது உயிரின் அறிவாகிய பசுஞானத்தினைக் குறித்தது. ஓதுதல் - வாக்கின் தொழில்; அது நூலறிவாகிய பாசஞானத்தினைக் குறித்தது. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் உணர்தற்கு அரியவன் முழுமுதற்பொருளாகிய இறைவன் என்பது புலப்படுத்துவார், ‘உலகு எலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் என்றார் சேக்கிழார் நாயனார். இதனால் மாற்றமனங்கழிய நின்ற இறைவனது சொரூபலக்கணம் எனப்படும் உண்மையியல்பு உணர்த்தப்பட்டது.

வாக்குமனமிறந்த வான் கருனையாளனாகிய இறைவன் தன்னடியார்க்கு எளிவந்து அருள் புரியுங்கால் உருவத் திருமேனி தாங்கி எழுந்தருள்வன் என்பார் ‘நிலவுலாவிய நீர்மலிவேணியன்’ என்றார். அருமையில் எளிய அழகனாகிய அவன் எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் அறவோர் சிந்தையினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளுவான் என்பார், அலகில் சோதியன்’ என்றார். 'நினைப்பவர் மனங்கோயிலாகக் கொண்டவன்’ எனவும், 'அந்தணர்தஞ்சிந்தையானை' எனவும், சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை எனவும் தூண்டுசுடரனைய சோதி கண்டாய் எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளும், 'ஏதுக்களாலும் எடுத்தமொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா கடர் விட்டுளன் எங்கள் சோதி’ என ஆளுடையபிள்ளையார் அருளுரையும், 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி” எனவரும் திருவாதவூரடிகள் மணிவாசகமும் இங்கு நினைக்கத் தக்கனவாகும். அரியவன் என்றதனால் அருவமும், வேனியன்............. அம்பலத்து ஆடுவான்’ என்றதனால் உருவமும், 'அலகில்சோதியன்’ என்றதனால் அருவுருவமும் என மூவகைத் திருமேனி களையும் ஒருங்குடையவன் இறைவன் எனப் புலப் ப்டுத்தியவாறு,