பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தொல்காப்பியனார் கொள்கையாதல் உய்த்துணரப்படும். "உயிர் எத்தன்மைத்து? என்று வினாய வழி, உணர்தற் றன்மைத்து என்றல் செவ்வன் இறையாம்” என்பர் சேனாவரையர். உணருந்தன்மையுடையது எதுவோ அதுவே உயிர் என வழங்கப்பெறும் என்பது இவ்வுரைவிளக்கத்தால் நன்கு விளங்கும். பொறிகளால் மிக்கும் குறைந்தும் காணப்படும் பல்வேறு உடம்புகளைப் பெற்று வாழும் எல்லாவுயிர்கட்கும் அறியுந்தன்மையென்பது பொது வியல்பாகும். உயிர்கள் தாந்தாம் பெற்றுள்ள உடம்பின்கண் அமைந்த கண் செவி முதலிய அறிதற் கருவிகளின் குறைவுமிகுதிகட்கேற்ப அவற்றின் உணர்ச்சி வாயில்கள் வேறுபடும் நீர்மையனவாம். இவ்வுலகிற் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள அறிவுடைப் பொருள்கள் யாவும் உயிர்களேயாம். எனினும் அவற்றின் அறிவு அவை பெற்றுள்ள பொறிகளின் குறைவுமிகுதிகட் கேற்பக் குறைந்தும் வளர்ந்தும் அமைந்த இயல்பினைத் தொல்காப்பிய னார்க்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் நுணுகி யாராய்ந்து கண்டார்கள். அவ்வாராய்ச்சியின் பயனாக எல்லாவுயிர்களையும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகையாகப் பகுத்துள்ளனர்.

கானாமரயினவாகிய உயிர்களைக் காணப்படும் நிலையில் அவை பெற்றுள்ள உடம்பினாற் கருதியுணர்ந்து உடம்பின்கண் அமைந்த அறிகருவிகளாகிய ஐம்பொறிகள் பற்றியும் அகக்கருவியாகிய மனம் பற்றியும் அறுவகை யுயிர்களாகத் தமிழ் முன்னோர் பகுத்த முறையினை ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் ஒன்றறிவதுவே உற்றறிவது” என்பது முதலாகவுள்ள ஏழு சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளார். புல் மரம் எனப்படும் தாவரங்கள் தொட்டால் உணரும் ஊற்றுணர்வு ஒன்றேயுடையன. ஆதலின் அவை ஓரறிவுயிர்கள். நத்தை சங்கு இப்பி முதலியன பிறிதொன்று தம்மைத்தாக்கிய போது உடம்பினால் உற்றறியும் ஊற்றுணர்வும் உணவினைச் சுவைத்தறியும் நாவுணர்வும் உடைமையின் அவை ஈரறிவுயிர்களாகும். கரையான் எறும்பு முதலியன முற்குறித்த ஊற்றுணர்வு சுவையுணர்வு என்னும் இரண்டுடன் மோந்தறிதலாகிய மூக்குனர்வும் உடைமையின்