பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் தொடர்களில் ஞானநெறியினை அடிப்படையாகக் கொண்டு நிகழும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் குறித்துள்ளமை காண்க. இதனால் ஞானநெறியொன்றே ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என நான்காக வகுத்துரைக்கப்படும் என்பதும் உய்த்துணர வைத்தா ராயிற்று.

வேத சிவாகமங்களிலும், "எனதுரையாக தனதுரை யாக’ என்றபடி இறைவன் அருள்வழியடங்கி நின்ற திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் முதலிய சிவாதுபவச் செல்வர்கள் திருவாய்மலர்ந்தருளிய அருள்நூல்களாகிய திருமுறைகளிலும் நிரம்பிய பயிற்சியும் ஈடுபாடும் உடைய சேக்கிழார் நாயனார், வேத நெறி தழைத் தோங்க மிகு சைவத்துறை விளங்கத் தாம் இயற்றிய திருத் தொண்டர் புராணமாகிய செந்தமிழ்க் காப்பியத்தில் உலகியல் வேதநூலொழுக்கமாகிய வைதிக நெறியினையும், அதனினும் சிறப்புடையதாகத் தமிழ்ச் சான்றோர்களால் பேணி வளர்க்கப்பெற்று என்றும் நின்று நிலவும் பெருமை வாய்ந்த மெய்ந்நெறியாகிய சிவநெறியினையும் பொதுவும் சிறப்புமாகிய அந்நெறிகளில் வழுவாதொழுகிச் சிவபெருமான் திருவருளுக்குரியராகிய திருத்தொண்டர் களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் வைத்து இனிது விளக்கி யுள்ளார்.

தமிழகத்திற் சைவ சமயச் சான்றோர்களால் இறைவன் திருவருள் கொண்டு போற்றி வளர்க்கப்பெற்ற சைவ சித்தாந்தத் தத்துவ உண்மைகள் பல இத்திருத்தொண்டர் புராணத்தில் இலக்கியச் சுவையமைய நன்கு விளக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

கன்னிவேட்டைக்குச் சென்ற திண்ணனார் காளத்தி மலையினைக் கண்டு அம்மலைமேல் எழுந்தருளிய குடுமித் தேவரை வழிபடுதல் வேண்டுமென்னும் பெருவேட்கை யுடையராய் நாணனைத் துணையாகக் கொண்டு காளத்தி மலைமேல் ஏறிச் சென்ற அன்பின் திறத்தினை,