பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

825


சைவ சித்தாந்த நூற்றுனிபாகும். இதனை,

“தொழுவார் தம் மும்மை

மாமலங்களற வீடருள்தில்லை மல்லலம் பதியின்”

(பெரிய தடுத்தாட் 92)

எனவும்,

"தொல்லைவினை, ஆசுடைய மலமூன்றும் அனையவரும் . பெரும்பிறவி மாசுதனைவிடக் கழித்து” (பெரிய திருக்குறிப்பு: 114)

எனவும்,

&Ꮛ - * & Ag * -о. , 3% மருள்பொழி மும்மலஞ் சிதைக்கும் வடிச்சூலம்

(பெரிய சிறுத்தொண்டர். 35)

எனவும் வரும் தொடர்களுள் ஆசிரியர் குறித்துள்ளார்.

மேற்குறித்த மும்மலங்களுடன் ஆணவமலத்துடன் கூடி நின்று அதனைக் கழலும் பக்குவமுடையதாகச் செய்யும் இறைவனது மறைப்புச் சத்தியாகிய திரோதமலத்தினையும் ஆன்மாக்களுக்குத் தனுகரனபுவன போகங்களாய்க் காரியப்படும் சுத்தமாயையின் திரட்சியாகிய சுத்த தத்துவங் களையும் கூட்டி மலம் ஐந்து எனப்பகுத்துரைக்கும் வழக்கம் உண்டென்பது,

“மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்துறவே (நீத்தல் விண்ணப்பம் 29) எனவரும் திருவாசகத் தொடரால் அறியப்படும்.

“தன்பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றும் அற

அன்புப்பிழம்பாய்த் திரிவார்” (பெரிய கண்ணப்பர் 154)

எனவும்,

"இருவினைப்பாசமும்மலக்கல் ஆர்த்தலின்

வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளுமெய் யஞ்செழுத் தரசையிக்கடல் ஒருகல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ”

(பெரிய திருநாவுக். 129)