பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

77


வாழ்வினை நிலையற்றதெனக் கருதி விலகியொழுகுதல் கூடாதென்பதும், இவ்வாறு ஒருநிலையில் நில்லாத உலகியற் கூறுகளைப் பற்றுக்கோடாகப் பற்றி நின்றே உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையுடைய நற்பொருள்களைத் தேடிக் கொள்ளுதல் வேண்டுமென்பதும் தொல்காப்பியர் கொள்கையாகும். இங்ங்னம் உலக வாழ்க்கையில் நேரும் பலவகைத் தடைகளை யெதிர்த்துநின்று நிலையாத பொருள்களைச் சாதனமாகக் கொண்டு நிலையுடையன வற்றை யெய்துதலே காஞ்சித் தினையென்னும் ஒழுகலாறாகும். இதனியல்பினை,

"காஞ்சிதானே பெருந்திணைப்புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாத் நானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே"

எனவரும் சூத்திரத்தால் ஆசிரியர் விளக்கியுள்ளார். ‘எதிருன்றல் காஞ்சி' என்னும் பன்னிருபடல நூலாசிரியர் கொள்கையும் இவ்வாசிரியரது கருத்தினை அடியொற்றி யமைந்ததேயாகும்.

மக்கட்குலத்தாரை உயர்தினையாக உயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாகும். தெய்வவழிபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது வாழ்வியலறங்களிற் பிறழாத ந்ல்லொழுக்கமேயாதலின் கடவுள் வழிபாட்டுநெறியினைப் பொய்தீர் ஒழுக்க நெறி' எனக் குறித்தார் தெய்வப்புலவர். உயர்தினை மாந்தர் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வினைப் பெறுதற்கு உறுதுனையாவது ஒழுக்கமேயாதலின் அதனைத் தம் உயிரினுஞ் சிறந்ததாகத் தமிழ் முன்னோர் கடைப்பிடித் தொழுகினர். ஒழுக்கநெறியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ்மக்களின் குடும்ப வாழ்வும் அரசியல் வாழ்வும் உருப்பெற்று வளர்ந்தன. இவ்வுலக வாழ்க்கையினை வரம்பு அமைத்து வளர்ப்பதே ஒழுக்கநெறியாதலின் அது ‘கட்டமையொழுக்கம்’ எனப் பெற்றது. ஒழுக்க நெறியிற் சிறிதும் வழுவாது வாழுஞ் சான்றோர்களின் சால்பினது

23. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்தினையியல், 18.