பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வெற்றி உலகமக்கள் எல்லாராலும் பாராட்டிப் போற்றுதற்குரிய நல்லறிவின் தோற்றமாதலின் அது ‘கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை எனப்பட்டது. கண்ணுமை என்றது கண்ணின் தன்மையாகிய காட்சியினை: அஃது ஈண்டு நல்லறிவின் தோற்றமாகிய செயற்பாட்டினைக் குறித்து நின்றது. ஒழுக்கத்தால் உயர்ந்த பெருமக்களைச் சார்ந்து அவர்கள் அறிவுறுத்திய நன்னெறியினைக் கடைப்பிடித்தொழுகலும் தெய்வ வழிபாட்டின் சார்புடையதேயாகும். அறவோராகிய அந்தணர்பாலும் சான்றோர் கண்ணும் அழியாச் சிறப்புடைய பெரியோரிடத்தும் இவ்வாறு ஒழுகுதல் வேண்டும் என ஒருவர் ஒருவர்க்கு அறிவுறுத்தும் முறைமையினை அந்தனர் திறத்தும் சான்றோர்திறத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு’ என்பர் தொல்காப்பியனார்.

ஒழுக்கத்தைப் பேணாது தலைவன் வழுவியது கண்ட தலைவி, தன் கணவனது பழிநிலைக்கு நானுந் திறத்தினைப் 'பேனா ஒழுக்கம் நானிய பொருளினும்’ என்ற தொடராலும், பெரியோர்க்கு 'ஒழுக்கமே பெரியது” என்பதனைத் தோழி அறிவுறுத்துமியல்பினைப் பெரியோ ரொழுக்கம் பெரிது எனக்கிளந்து என்ற தொடராலும் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்ததென்பது தொல்காப்பியனார் துணியாகும். இத்தகைய நல்லொழுக்க நெறியினைக் குறிக்கொண்டு போற்றாது ஒருவர் பிறர்க்குச் செய்த கொடுஞ்செயல் செய்த அவரையே பற்றி வருத்தும் என்பது உலகவாழ்க்கையிற் பலரும் தெளிந்து கூறும் வினையுணர்வு பற்றிய நம்பிக்கையாகும். ஒருவர் செய்த கொடுஞ் செயல் செய்த அவரையே பற்றி வருத்தும் என்னும் இவ்வுண்மையினைக் கொடியோர் கொடுமை சுடும் எனத் தம் காலத்து வழங்கிய பழமொழியின் வாயிலாகத் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் வாழும் நன்மக்களால் அறிவுறுத்தப்பெறும் வாழ்வியல் முறைகளை நிலைக்களமாகக் கொண்டு அந்நாட்டுமக்கள் தம் வாழ்க்கையனுபவத்திற் கண்டுணர்ந்த