பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

79


தத்துவவுண்மைகள் இவையென அறிந்து கொள்ளுதல் எளிதாகும். மக்கள் தம் வாழ்க்கையின் உறதிப்பொருள் களாகக் கொள்ளுதற்குரியன அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாகும். இவ்வுறுதிப்பொருள்களை 'அறமுதலாகிய மும்முதற்பொருள்” எனவும் இன்ட'. பொருளும் அறனும் என்றாங்க’ எனவும் குறிப்பிடுவர் தொல்காப்பியர். அவற்து. இன்பம் என்பது எல்லா வுயிர்களாலும் விரும்பப்பெறும் நுகர்தல் வேட்கையாகும். பொருள் என்பது முற்குறித்த இன்பத்திற்குக் காரணமாக அறிவுடைய நன்மக்களால் ஈட்டப்பெறுவதாகும். அறம் என்பது, வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை ஈட்டுந்திறத்திற் பிறர்க்குத் தீங்கு நேராதவாறு மாசற்ற மனமொழிமெய்களாற் செய்யப்பெறுஞ் செயல்முறையாகும். நுகர்தல் வேட்கை முறைபற்றி 'இன்பமும் பொருளும் அறனும் எனவும் செய்கை முறைபற்றி அறம் பொருள் இன்பம் எனவும் எண்ணுதல் மரபு.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கிற்

- - • 232.4 &#1355 & i-i-io

என நுகர்தல் முறை பற்றியும்

"அந்நிலை மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப"

எனச் செய்கை முறை பற்றியும் மும்முதற்பொருள்களாகிய உறுதிப்பொருள்களை எண்ணியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றைத் தவிர அறிவுடைய் மக்களால் விரும்பி மதித்தற்குரியன பிற இன்மையின் இம்மூன்றையும் மும்முதற்பொருள்’ எனச் சிறப்பித்துரைத்தார். அறத்தினாற் பொருளையீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக்களது நல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு மூன்று பகுதியாக நிகழும் இவ்வுலக

24. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 1. 25. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 105.