பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

81


வுயிர்களிடத்தும் இரக்கமுடையராய் செம்பொருளாகிய முழுமுதற்பொருளின் அருளையே சார்பாகப் பற்றிக் கொண்டு உலகப்பற்றினைத் துறந்து ஒழுகுதல் துறவுநிலை யாகும். இத்துறவினை வாகைத்திணைக்குரிய துறைகளுள் அருளொடு புணர்ந்த அகற்சி என்ற துறையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர்.

குற்றமும் குனமும் விரவிய நிலையில் நிகழ்வதே உலகியல் வாழ்வு. வாழ்க்கையில் நேரும் குற்றங்களை நீக்கிக் குனங்களால் உயர்ந்து வாழ்க்கையிற் பெறும் மேதகவே வாழ்க்கையின் வெற்றியாகும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்பன மக்களிடத்தே காணப்படும் அறுவகைக் குற்றங்களாகும். வெல்லுதற்கு அரிய உட்பகையாயிருந்து வாழ்க்கையில் துன்பம் விளைப்பன இக்குற்றங்களாகும். இவ்வறுவகைக் குற்றங்களையும் சான்றோர் தம் உள்ளத்துறுதியாலும் அறிவின் திண்மையாலும் வென்று மேம்படுத்திறத்தினை ‘அரும்பகை தாங்கும் ஆற்றல்’ என்னும் துறையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். உட்பகையாகிய இக் குற்றங்களை அரும்பகை எனத் தொல்காப்பியனார் கூறியது போலவே குற்றமே அற்றந்தரூஉம் பகை' எனத் திருவள்ளுவரும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை காணலாம். மக்களது நல்வாழ்வினைச் சிதைப்பன மனத்தின்கண் தோன்றும் தீயநினைவுகளேயென்பதும் அத்தகைய மனமாசுகளைக் களைய வல்ல நல்லுனர் வுடையவர்களே ஆற்றல் மிக்க நன்மக்கள் என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது, ‘அரும்பகை தாங்கும் ஆற்றலானும்’ எனவரும் இத்தொல்காப்பியத் தொடரால் நன்கு துணியப்படும்.

உலக வாழ்க்கையில் ஒருவனும் ஒருத்தியும் மனந்து மனையறம் நிகழ்த்தி அன்பிற்சிறந்து வாழ்ந்ததன் பயனாக அவ்விருவரையும் அடுத்து வரும் பிறவியிலும் கணவனும் மனைவியுமாகப் பொருத்தி வாழும் வண்ணம் ஒன்று சேர்ப்பதும் அன்பின்மை காரணமாக அவ்விருவரையும் பிரித்து வேறாக்குவதும் என ஊழ் இருவகைப்படும். கணவன்

ஆசை. ச. சா. வ. 8