பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இவ்வுணர்வு இவற்றை யுணர் தற்குக் கருவியாகிய சொற்களிலும் இனிது புலப்படும்படி தாம் பேசும் மொழியிலமைந்த பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் உயர்தினைச் சொல், அஃறினைச் சொல், இரு திணைக்கும் உரிய பொதுச்சொல் எனப் பகுத்துரைத் தனர். இவ்வாறு பொருள்களும் அவற்றை யுணர்தற்குக் கருவியாகிய சொற்களும் இயைந்து பொருள் இனிது புலனாகுமாறு தமது தாய்மொழியாகிய தமிழை உருவாக்கிய பெருமை தமிழ் முன்னோர்க்குரிய தனிச்சிறப்பாகும். இவ்வாறே தமிழ் எழுத்துக்களுள் தனித்தியங்கும் இயல்பின வற்றை உயிர் எனவும் அவ்வுயிரெழுத்துக்களுடன் இயைந் தன்றி இயங்காதனவற்றை மெய் எனவும் பெயரிட்டு வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாரது தத்துவ வுணர்வு அறிஞர் களால் வியந்து பாராட்டுதற்குரியதாகும்.

மாக்கள் எனப்படும் விலங்கினின்றும் மக்களை வேறுபடுத்து உயர்த்துவது கல்வி. கல்விப் பயிற்சிக்கு நிலைக்களமாகத் திகழ்வது மக்களாற் பேசப்படும் மொழியாகும். இத்தகைய மொழிகள் உருப்பெறாத தொன்மைக் காலத்தே வாழ்ந்த மக்கள், உண்ணுதற்கேற்ற சுவையான உணவும் உடுத்தற்கேற்ற உடையும் தங்குதற்குரிய உறையுளும் பெறாது காடுகளிலும் மலைகளிலும் புதர்களிலும் புலி முதலிய கொடிய விலங்கினங்களோடும் பாம்பு முதலிய நச்சுயிர்களோடும் உடனுறைய வேண்டிய இடர் நிலையினராய், இடி மின்னல் மழை புயல் கடல்கோள் நில நடுக்கம் எரிமலை காட்டுத்தி முதலிய இயற்கை யிடையூறுகளாலும் மக்கள் கூட்டத்திற் பகைவர்களாலும் பெரிதும் அல்லலுற்று இடம்பெயர்ந்து அலைந்து திரிந்தனர். பின்னர்த் தமக்குரியதாக ஓரிடத்தினைத் தேர்ந்துகொண்டு அங்கு இயல்பாக வளர்ந்த தாவரங்களிலிருந்து கிடைத்த காய்கனி முதலியவற்றையும் விலங்குகளையும் பறவை களையும் வேட்டைத் தொழிலாற் கொன்று பெற்ற இறைச்சியையும் தின்று தமது பசியைத் தனித்துக் கொண்டனர். புயல், பெருவெள்ளம், கொள்ளை நோய் முதலிய இயற்கையிடையூறுகளில் அகப்பட்டுத் தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்