பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மக்களை வருத்தும் இயல்புடையனவாகக் கருதப்படும் பேய் பூதம் முதலிய சிறு தெய்வங்களை அணங்கு எனவும், தம்மை அன்பினால் வழிபடுவார்க்கு அருள் சுரந்து துன்பத் தை நீக்கி நலம் புரியும் இறைமைப் பண்புடைய பெருந்தெய்வத்தை இறை, தெய்வம் எனவும் வழங்குதல் மரபு. அறிவியல் நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும் மக்களிற் பெரும்பாலோர் தமக்கும் தம் உறவினர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சியே தெய்வத்தை வழிபடக் காண்கின்றோம். இவ்வாறு அச்சங் காரணமாக நிகழும் வழிபாடுகள் அனைத்தும் மக்கள் தமக்கு நேரும் தீமைகளை விலக்குதலைக் குறிக்கோளாகக் கொண்டனவே என்பது உலகிற்பலரும் அறிந்த உண்மையாகும்.

“அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாஞ் சிறிது” (குறள். 10.75)

எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழி இங்கு நினைக்கத் தக்கதாகும்

அச்சத்தினால் வழிபடுதற்குரிய சிறுதெய்வங்கள் அணங்கு எனவும் அச்சத்துட னும் அன்புடனும் வழிபடுதற்குரியவை தெய்வமெனவும் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இந்நுட்பம்,

"அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே'

எனவும், தெய்வம் அஞ்சல் புரையறந்தெளிதல் எனவும் வரும் தொல்காப்பிய நூற்பாக்களால் இனிது புலனாதல் காணலாம். உலகிற் பண்டைக்காலம் முதல் இன்றுவரை நிலவி வரும் தெய்வ வழிபாடுகள் யாவும் மக்களுள்ளத்தே தோன்றிய அச்சங்காரணமாகவும் அன்பு காரணமாகவும் நிகழ்வனவேயாகும்.

“அஞ்சியாகிலும் அன்புப்பட்டாகிலும்

நெஞ்சம் வழிநினை நின்றியூரை நீ”

எனவரும் அருளிச் செயல் தெய்வ வழிபாட்டிற்குக்