பக்கம்:சொன்னார்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

செய்ததைப் பற்றிச் சிலர் பழிச்சொல் கூறும்படி இருந்த போதிலும், அது வெளிக்கு வருமாயின், எனக்கு அதனல் மேன்மையும், திருப்தியும் உண்டாகும்.

—ஜார்ஜ் நார்ட்டன் (2-10-1846)
(சென்னை சுப்ரீம் கோர்ட் அட்வொகேட் ஜெனரல்)

நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது. வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவன் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொண்டார்.

—இராமலிங்க அடிகள் (30-1-1874)

நான் போய்ச் சேர்ந்த மிஷன் பாடசாலை சுமார் மூன்று மாதத்திற்குள் கலாசாலை ஆகிவிட்டது. வித்துவான் H.A. கிருஷ்ணபிள்ளை எங்களுக்குத் தமிழாசிரியராக வந்தார். அவர் சிவந்த மேனியும் மெல்லிய உருவமுடையவராய் இருந்தார். என் தகப்பனாரைப் போன்ற சாயலாக இருந்தார். கம்பராமாயணத்தைப் பாராமல் ஒப்புவிப்பார்.

— தாமஸ் கதிர்வேல் நாயனர் (17.9-1879)
(H. A. கிருஷ்ணபிள்ளையின் மாணவர்)

நாம் எண்ணுவதிலும் அதிகமாய், உலகத்தில் சாதுக்களும் பெரியோர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க, நாமெல்லாம் மனம் வருந்துவதேன்? ஒருவனுடைய புகழ்நிலையானதா என்பதை நீ அறிய விரும்பினால், பெரிய நூல் நிலையத்திற்குப் போ. உண்மையான நிலைபேறென்பது, ஒருவனது மிகச் சிறந்த செயல்களேயாகும். ஆகையால், இராஜாராம் மோகன்ராய் என்னும் இம் மகாபுருஷனுடைய வரலாற்றைப் படித்து நாமும் நற்குணமும் நன் முயற்சியும் உடையவர்களாய், ஒன்றான பரமாத்துமாவை அன்புடன் உபாசித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/10&oldid=1013124" இலிருந்து மீள்விக்கப்பட்டது