பக்கம்:சொன்னார்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99


சங்கீதத்தை நாம் நன்றாக ரசித்து, அநுபவித்து அதனால் உள்ளம் நெகிழுவதற்குப் பாஷை அவசியம். பாஷை தான் நாம் அதை அதிகம் அதுபவிக்கும்படிச் செய்கிறது. எனவே, கேட்பவரின் ஹிருதயத்தைத் தொடுவதற்கு அவருக்குப் புரியும் பாஷையிலேதான் பாட்டுகள் பாடப்பட வேண்டியது நியாயம்.

—ராஜாஜி (30-1-1942)

(காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.)

இன்று பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் எங்களுக்கு அந்தக் காலத்தில் கார் கிடையாது! அப்போது நாங்கள் எல்லாம் வெறும் “பிளாட்பாரம் டிக்கட்டுகள்” ஆனால் அந்தக் காலத்திலேயே மிகவும் விலையுயர்ந்த காரில் சவாரி செய்தார், பாகவதர்! திருச்சியில் அரண்மனைபோல் வீடு கட்டி, ராஜாபோல் வாழ்ந்தார்.

—எம். ஆர்.ராதா (17 - 12 - 1959)


உண்மையைச் சொன்னல் எனக்கு சமைக்கத் தெரியாது. ஒருமுறை சமைக்க தெரியும் என்று சொல்லிவிட்டுப் புத்தகத்தை படித்து சமையல் செய்தேன். அப்போது பட்ட அவதி எனக்குத்தான் தெரியும். கையில் சூடுபட்டு படாதபாடு பட்டேன்.

—ராஜஸ்ரீ


பணம், காசு, பண்டம் முதலியவற்றில் எனக்குப் பேராசை உண்டு. இவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியம் காட்டியிருப்பேனே தவிர, அவைகளில் நாணயக் குறைவையோ, நம்பிக்கை துரோகத்தையோ நான் காட்டியிருக்க மாட்டேன். வியாபாரத்துறையில், பொய்பேசி இருந்தாலும், பொது வாழ்வில், பொய்யையோ மனம் அறிந்து மாற்றுக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன்.

—பெரியார் (1 - 1 - 1962)