பக்கம்:சொன்னார்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123


உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன்.

—லார்டு மெக்காலே

(உலகப் புகழ்பெற்ற மேதை)

எனக்கு ஒரு தலைப்புத் தந்தால், அதை நான் இரவும், பகலும் ஆழ்ந்து படித்து விடுவேன். என் உள்ளமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். பிறகு என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து அனைவரும் ‘அறிவுப்பழம்’ என்று பாராட்டுவார்கள் ஆனால் அது அறிவின் பழமல்ல, உழைப்பிற்கும் சிந்தனைக்கும் விளைந்த கனியாகும்,

—எமில்டன்

(புகழ்பெற்ற பேச்சாளர்)

நான் எந்த மேடையிலும், எந்தச் சமயத்திலும் மனச் சோர்வடைவதில்லை; ஒரு காரியத்தைச் சாதிக்க முதலாவது வேண்டப்படுவது கடினமான உழைப்பு; இரண்டாவது தொடர்ந்து படித்தல்; மூன்றாவது பகுத்தறிவு.

—தாமஸ் ஆல்வா எடிசன்

(உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி)

நான் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நான்தான் மிக இளைய அங்கத்தினர் என்று உணர்ந்து கொண்டேன். அனுபவமற்ற, மற்ற இளைஞர்களைப் போல், “பேசுவதெப்படி?” என்பதை அறியாமல் திணறினேன். திக்குமுக்காடினேன். என் இளம் பருவத்தில், என் திறமைகளில் நம்பிக்கையற்றும், பேச தடுமாற்றமடைந்து கொண்டுமிருந்தேன். என் உள்ளத்தையும், ஆத்மாவையும் மிகுந்த அக்கறையோடு பண்படுத்திக் கொண்டேன்.

—ரூஸ்வெல்ட்

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/125&oldid=1016092" இலிருந்து மீள்விக்கப்பட்டது