பக்கம்:சொன்னார்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பெண்கள் மற்றெந்தத் தேசத்துப் பெண்களைப் பார்க்கிலும் மிக்க நாணமுள்ளவராகையால், தங்கள் வியாதிகளையும் கஷ்டங்களையும் அயலானொருவனிடம் சொல்லுவதைப் பார்க்கிலும் தங்கள் உயிர் போவதே நலமெனக் கருதுவர். மகளிர் பலர் அகால மரணத்திற்கு முக்கிய காரணம் பெண் வைத்தியர் இல்லாத குறைதான். ஆகையால், பெண்களுக்கென்று ஒரு வைத்திய கலாசாலை நிறுவும்படி நான் அரசாங்கத்தாரை மிக்க பரிவுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்து தேசத்துப் பெண்களுக்குப் பெண் வைத்தியர் மிக மிக அவசியம்.

பண்டிதை ராமாபாய் சரஸ்வதி
(1882-ல் பூனா நகரத்தில்)

சாதாரணமாகப் பெண்களுக்கு ஏற்படும் பொறுப்பை விடப் பெரிய பொறுப்பை நான் வகிக்கும்படி அல்லா கட்டளையிட்டார். என்னுடைய கணவர் திடீரென்று இறந்து போனதால் 27-வது வயதில் நான் விதவையாகி விட்டேன். அப்பொழுது 5 குழந்தைகள் எனக்கிருந்தன. அவர்களை வளர்த்துக் கல்வி கற்பிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. கடைசிக் குழந்தையாகிய முகம்மது அலிக்கு அப்பொழுது இரண்டு வயதுகூட ஆகவில்லை. அவர்களுடைய சொத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய வேலையும் எனக்கே ஏற்பட்டது. நல்ல காரியத்தைச் செய்வோருக்கு அல்லா உதவி செய்வாரென்று நம்பிக் கஷ்டப்பட்டேன். நான் பட்டபாடு வீணாகவில்லை. என்னுடைய பிள்ளைகள் எல்லோரும் தங்களுடைய காரியத்தைத் தாங்கள் பார்த்துக் கொள்ளும்படி யானவர்களாய் விட்டார்கள். இனி என்னுடைய உதவி அவர்களுக்கு அவசியமில்லையாகையால், எங்கள் மார்க்கத்துக்குரிய காரியங்களில் என் கவனத்தைச் செய்வதில்தான் எனக்கு எப்பொழுதும் ஆசை இருந்தது.

—அபாதிபேனோ அப்துல் அலி பீகம் (4 - 8 - 1917)
(முகம்மதலி, ஷெளகத் அலியின் தாய்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/14&oldid=1013129" இலிருந்து மீள்விக்கப்பட்டது