பக்கம்:சொன்னார்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


எனக்கு வரும் எல்லாக் கடிதங்களையம் படிக்க எனக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் சேர்த்து வைத்திருக்கிறேன். ஏனெனில் ரசிகர்கள் கடிதம் எதுவுமே வராத காலம் ஒன்று வரத்தான் செய்யும். அப்பொழுது அதைப் படித்துப் பார்ப்பேன்,

—ராதா சலூஜா

(பிரபல இந்தி நடிகை)


ஆண்டவன் எனக்கு எவ்வளவு அழகான, கவர்ச்சியான முகத்தை அளித்திருக்கிறான் பார்த்தீர்களா? நான் 12 வயது முதல் குத்துச் சண்டையிடுகிறேன். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 19 ஆண்டு காலத்தில் சுமார் 238 சண்டைகள் போட்டிருக்கிறேன். முகத்தில் ஒரு வடு, ஒரு கீறல் இருக்கிறதா பாருங்கள்.

—உலக குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி (1974)


கம்பனைப் பற்றியும் அவனது கவிச்சுவையைப் பற்றியும் சிறிதுகூற விரும்புகின்றேன். உடலுக்கு உணர்வை அளிக்கக் கூடியதும், உற்சாகத்தை ஊட்டக்கூடியதும் கம்பனது கவிச்சுவை. எனது பதினைந்தாவது வயது முதல் கம்பனது கவிச்சுவை என் நரம்புகளிலெல்லாம் ஊறியிருக்கின்றது.

—பண்டிதை அசலாம்பிகை அம்மையார் (20-4-1929)

(சென்னை இராயபுரத்தில்,

கண்ணபிரான் பக்த ஜனசபைக் கூட்டத்தில்)


படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகத்தையும் சட்டத்துறையையும் நாடினல், தேசத்திற்கு அதைக் காட்டிலும் பெரிய கெடுதல் இருக்க முடியாது. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய துறைகளில் அவர்கள் அதிகம் ஈடுபடலாம்.

—சர். வி. பாஷ்யம் ஐயங்கார் (28-3-1893)

(பல்கலைக்கழகப் பட்டாளிப்பு விழாவில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/57&oldid=1014003" இலிருந்து மீள்விக்கப்பட்டது