பக்கம்:சொன்னார்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ. 100-ல் இருந்து ரூ. 150 ஆக ஏற்படுத்திவிட்டேன். நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்திய செலவு முதலியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2, 3, பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்குப் பயன்படும்.

—தந்தை பெரியார் (16-6-1968)


நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன்.

—ராஜாஜி (5-3.1962)


நான் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. எந்த கடவுள் படத்தையும் பூஜிப்பதில்லை. கடவுள் கல்லிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. மனிதனே கடவுள். நானே கடவுள்

—பசவலிங்கப்பா (3-8-1973)

(மைசூர் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர்)


என்னுடைய தாயாரின் முன்னோர்கள் 12-வது நூற்றாண்டில் நார்வேயிலிருந்து ஸ்காட்லண்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். என்னுடைய முன்னேர்களில் ஒருவர் கடற் கொள்ளைக்காரராய் இருந்தார். அவர் பிடிக்கப்பட்டு, 1174—ஆம் ஆண்டில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

—டாக்டர் வில்லியம் மில்லர்


எவன் அதிக ஆச்சரியப்படுவதை நிறுத்திக் கொள்கிறானோ, அவன் சீக்கிரத்தில் புத்திசாலியாகிவிடுகிறான்.

—கவிஞர் சுரதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/80&oldid=1014711" இலிருந்து மீள்விக்கப்பட்டது