பக்கம்:சொன்னார்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79


அந்நிய கவர்ன்மெண்ட் எவ்வளவு உத்தமமானதாயினும், எவ்வளவு நல்லெண்ணமுடையதாயினும், மக்களின் வேண்டுகோளைத் தெரிந்து கொள்ள எவ்வளவு சிரத்தை காட்டின போதிலும், ஜாதி, மதம், நிறம், நாகரீகம் இவைகளில் முற்றிலும் அது வேற்றுமைப் பட்டதாயிருப்பதால் மக்களின் மனப்போக்கை யறிந்து அதன்படி நடப்பது இயற்கையாகவே அசாத்தியம். ஆகையால் சட்ட சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் அவசியம்.

—டாக்டர் ராஜேந்திரலாலா மித்ரா

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்)


பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாதீர்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதால் எந்த நன்மையும் இல்லை. என்மகனைக் கூட நான், ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகிறாய்?‘ என்று தான் கேட்கிறேன். நான் கூடப் பள்ளிக்கூடம் போகவில்லை. நான் என்ன கெட்டா போய்விட்டேன்?”

—ஜெயகாந்தன்

(சிறுகதை எழுத்தாளர்)


எந்தக் காலத்திலும் சீனா தோற்கடிக்கப் பெற்றது கிடையாது. யாராலும் அதைத் தோற்கடிக்க முடியாது. போர் வந்து விட்டால், முப்பது கோடிப் பேரை பலி கொடுத்து மீண்டும் உலகில் பெரிய நாடாய் இருக்கக் கூடிய அளவுக்கு எண்ணிக்கை பலம் சீனாவுக்கு உண்டு.

—மா. சே துங்


ஒரு தாஜ்மகாலைக் கட்ட அரசனின் முழு கவனமும், கஜானாவின் பணம் முழுவதும் செலவிட்டுக் கட்டி முடிக்க 14—ஆண்டுகள் முடிந்ததாகக் கூறும் போது, ஒரு பெரிய உபகண்டத்தின் முன்னேற்றம் அடைய நீண்ட காலம் ஆவது இயற்கையே.

—எம். ஏ. மாணிக்கவேலு

(சென்னை ரெவின் யூ மந்திரி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/81&oldid=1015871" இலிருந்து மீள்விக்கப்பட்டது