பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

சொன்னால் நம்பமாட்டீர்கள்


இழுத்து வந்தது. “தமிழ்ப் பண்ணை” வைத்து தமிழ் வளர்க்கும் ஒரு நிலையம் சென்னையில் இருப்பதைச் சிறையிலிருக்கும் போதே அவர் அறிந்திருக்கிறார்.

சிறையிலிருந்து விடுதலையாகி; சென்னைக்கு வரும் ஒவ்வொரு தேச பக்தரும் அப்போது தமிழ்ப்பண்ணைக்கு வராமல் ஊருக்குப் போவதில்லை. அதுவும் திரு. ம.பொ.சி. அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான் அவர் தமிழ்பண்ணைக்கு வந்தார்.

அதற்கு முன் நான் அவரைப் பார்த்ததில்லை. பிரமாதமாகக் கேள்விப்பட்டதுமில்லை. அப்போது அவர் பெயர் சென்னை நகரத்தில் அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுந்தான் தெரிந்திருந்தது. ஆயினும் அவரைப் பார்த்ததும் என்மனதில் ஒரு பெரிய எண்ணம் உருவானது. அவரும் நானும் முதன் முதலில் விழித்துக் கொண்ட வேளை-என்னைப் பொறுத்தவரையில் ‘மிக நல்ல வேளை’ என்பது என் அபிப்பிராயம்.

திரு. ம.பொ.சி.அவர்கள் தமிழ்ப்பண்ணை மூலம் வெளிவந்த நூல்களை எல்லாம் பார்த்தார். அதன் அழகிய தோற்றம் அவரைக் கவர்ந்தது. தமிழ்ப் புத்தகத்தையும் இவ்வளவு அழகாக வெளியிட முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் பரவசமடைந்தார்.

பின்னர், தான் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். திரு.ம.பொ.சி.

அது ஒரு சிறு புத்தகம். சாணி நிறத் தாளில் அச்சிடப் பட்டிருந்தது. விலை எட்டணா போட்டிருந்தது. புத்தகத்தின் தலைப்பு “வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு” என்பதாகும்.

மேற்படி புத்தகத்தை திரு. ம.பொ.சி. மிகவும் சிரமப்பட்டு வெளியிட்டாராம். விற்பனைசெய்து அது சம்பந்தமாகப் பணம்