பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

99


கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தாராம். ஆனால் அவர் நினைத்தப்டி புத்தகங்கள் விற்கவில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டார்.

கையிருப்பு இருக்கும் புத்தகம் பூராவும் கொண்டு வரச் சொன்னேன்-விற்பனைக் கமிஷன் கழித்து மிச்ச ரூபாயை கணக்குச் செய்து திரு. ம.பொ.சி. அவர்களிடம் கொடுத்து விட்டேன்.

பின்னர் அந்தப் புத்தகத்தின் மேல் அட்டையை அகற்றிவிட்டு, புதிதாக மேலட்டை, ஒன்று தயார் செய்து அழகிய முறையில் கப்பலோட்டிய தமிழன் என்று பெயர்கொடுத்து, அந்த மேலட்டையைப் புத்தகத்திற்குப் போட்டு அதே எட்டனா புத்தகத்தை ஒரு ரூபாய் விலை போட்டு, தகுந்த விளம்பரம் செய்து மேற்படிப் புத்தகங்கள் அனைத்தையும் விற்றேன். பின்னர் அந்த நூலையே திரு. ம.பொ.சி. அவர்களை விரிவாக எழுதச் சொல்லி, மேலும் அழகு சேர்த்து வெளியிட்டு மூன்று ரூபாய் விலைக்கு விற்க ஏற்பாடு செய்தேன்.

அதே “கப்பலோட்டிய தமிழன்” என்ற நூல் பின்னர் பல பதிப்புகள் வெளிவந்து தமிழகம் முழுவதும் வ.உ.சியின் புகழைப் பரப்பியதோடு ம.பொ.சியின் புகழையும் பரப்பியது.

தமிழ் உணர்ச்சி என்னையும் திரு. ம.பொ.சி. அவர்களையும் ஒன்றாக இணைத்தது. அரசியலில் நானும் திரு. ம.பொ.சி. அவர்களும் மிக நெருக்கமாக இணையக் காரணமாக இருந்தவர் ராஜாஜி.

“காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்” என்று திரு காமராஜ் அவர்களும் மற்றும் சிலரும் வாதாடினார்கள். “ராஜாஜி வேண்டும்” என்று தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரசாரம்