பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கல்கி தந்த கார்

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சென்னையில் அடையாறு பங்களாவில் வசித்து வந்தார். நான் தினமும் மாலை 4 மணிக்கு அவரைப் பார்க்கப் போவேன். இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பின்னர் விடை பெற்றுக்கொண்டு நான் வீட்டிற்கு செல்வது வழக்கம். சில சமயம் இரவு 8 மணி கூட ஆகும்.

ஒரு நாள் இரவு 10 மணி ஆகிவிட்டது. கல்கியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். மாடியிலிருந்தபடியே அவர் நான் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கேட்அருகில் நான் சென்றதும், என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “கார் எங்கே?” என்று கேட்டார்.

“காரா? கார் ஏது” என்றேன்.

“சரி இங்கே வாங்கோ,” என்றார். மீண்டும் மாடிக்குப் போனேன்.

“தினமும் மாம்பலத்திலிருந்து எப்படி வருகிறீர்கள்?” என்றார்.

“பஸ் மூலம்தான். லஸ் வந்து பஸ் மாறி அடையாறு வருவேன்” என்றேன்.

“ஓகோ அப்படியா?” என்று கேட்டுவிட்டுத் தன் மைத்துனனைக் கூப்பிட்டு என்னைக் காரில் வீட்டுக்குக் கொண்டுபோய் விடும்படி சொன்னார். மறுநாள் வழக்கம் போல்