பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

119


முன்னணியில் நின்று வருகிறது. ஆலயப் பிரவேசம் கூட முதன் முதலில் மதுரையில்தான் நடந்தது.!

இப்படி எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கும் மதுரை, சங்கீத விஷயத்திலும் முன்னணியில் நிற்பதில் ஆச்சரியமில்லை.

பிரபல சங்கீத வித்வான் புஷ்பவனம் அய்யர், மதுரை.மணி அய்யர், ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி முதலிய முதல்தர வித்வான்களைத் தமிழ் நாட்டுக்கு ஈந்த பெருமை மதுரைக்குத் தான் உண்டு.

இத்தகையப் பிரசித்திவாய்ந்த மதுரை மாநாகரத்தில் “பொற்றாமரைக் குளம்” என்று ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் வெகுகாலத்துக்கு முன்பு ‘சங்கப்பலகை’ என்பதாக ஒரு பலகை இருந்ததாம்.

அந்தப் பலகைக்குத் தயை தாட்சண்யம் என்பது கொஞ்சமும் கிடையாதாம். தகுதியுள்ளவர்களை ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களைத் தள்ளிவிடுவதும் அதன் பிடிவாத துர்க்குணமாக இருந்ததாம்!

இதனால் அநேகர் அதில் ஸ்தானம் பெறமுயன்றும் முடியாமற் போய்விட்டது. சங்கப் பலகை அங்கீகரித்த வித்வான்கள்தான் வித்வான்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் போலி என்றும் ஆகிவிடுமாம்.

ஆகவே சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்படாத பண்டிதர்கள், கவிஞர்கள் கலைஞர்கள் அனைவரும் கோபம் கொண்டு மேற்படி பலகையைச் சுக்கு நூறாக்கிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.