பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சொன்னால் நம்பமாட்டீர்கள்


எழுதினார். உடனே சிலர், “அடடா அந்த பெண்மணி எப்போதும் கதர் அணிபவராயிற்றே, தேர்தல் கூட்டத்தில் வந்துகூட பாடுவாரே! அவரைப் பற்றி இப்படி எழுதலாமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு கல்கி “அந்தக் கதரபிமானமுள்ள பெண்மணி காங்கிரஸ் அபேட்சகராக எங்கேயாவது தேர்தலுக்கு நின்றால், அவருக்கு ஒட்டுக் கொடுங்கள் என்று பிரச்சாரம் செய்வேன்.

ஆனால் ஒருவர் காங்கிரஸ்வாதி என்பதற்காக அவருடைய அபஸ்வரங்களை ஸுவரங்கள் என்றோ மோசமான தடிப்பை நல்ல நடிப்பு என்றோ நான் ஒப்புக் கொள்ள முடியாது. அம்மாதிரி நிலைமை ஏற்பட்டுவிட்டால் அப்புறம் டாக்டர் ராஜன் பாட்டுக்கச்சேரி செய்தால் நன்றாயிருக்கிறதென்று சொல்ல வேண்டும். நீ முத்துரங்க முதலியார் கதாகாலட்சேபம் செய்தால் அதற்கும் பலே போடவேண்டும்.

ஸ்ரீமதி ருக்மணி லக்ஷ்மிபதி பரதநாட்டியம் ஆடினால் கூடத் தலையை ஆட்டவேண்டி நேரும், இப்படியெல்லாம் வந்துவிட்டால் தமிழ்நாட்டில் கலைகள் உருப்பட்டாற் போலத்தான்? என்றார்.

பரத நாட்டியத்திலும் சங்கீதத்திலும் அவருக்குள்ள அபிமானம் காரணமாகத் தமிழ் நாட்டில் காலைத் தூக்கிக் குதிப்பவர்களையெல்லாம் உயர்ந்த நாட்டியக்காரர்களென்றோ, வாயைத் திறந்து பாடுபவர்களையெல்லாம் சிறந்த சங்கீத வித்வான்களென்றோ, வேஷம் போட்டு மேடையில் தோன்றுபவர்களையெல்லாம் சிறந்த நடிகர்களென்றோ கூறிவிடமாட்டார்.

ஒரு வித்வானுடைய சங்கீதம் கல்கிக்குப் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், மேற்படி வித்வான்