பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

123


பிடிவாதமாய் “தமிழ்ப் பாட்டுப் பாடமாட்டேன் வேறு பாஷையில்தான் பாடுவேன்” என்றால் அதற்காக அவருடைய சங்கீதம் நன்றாயில்லையென்று சொல்லும் வழக்கம் கல்கிக்குக் கிடையாது. “ஐயாே இந்தப் பாவி மனிதர் இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே, இவர் தமிழ் அபிமானியாகவும் இருக்கக்கூடாதா?” என்று எண்ணித்தான் வருந்துவார்.

திரு. ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் சிறு பையனாக இருந்தபோது, நமது இந்திய தேசம் அவருடைய சேவையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே அவருக்குத் தெரியாமலிருந்ததாம். அப்போதெல்லாம் அவர் மனதறிந்து தேசத்திற்காக ஒருவிதச் சேவையும் செய்ததில்லையாம். ஒரே ஒரு தடவை செய்ய முயன்ற சேவையும் விபரீதமாக முடிந்ததாம்.

அந்தக் காலத்தில் ஒருநாள் தேசம் அவருடைய பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலிருந்த பாழும் கிணற்றில் விழுந்து விட்டதாம், முழுகுவதற்கு வேண்டியதண்ணீர் இல்லாமல் தேசம் தத்தளித்துக் கொண்டிருந்த சமயம் பக்கத்திலிருந்த தேசபக்தர்கள் சிலர் கல்கியைப் பார்த்து, “அப்பா தேசத்தைக் காப்பாற்ற ஒரு துரும்பையாவது நீ எடுத்துப் போடக் கூடாதா?” என்று சொன்னார்களாம்.

“உடனே கல்கி துரும்பு என்னத்திற்கு? கல்லைத்துக்கியே போடுகிறேன்” என்று கூறிவிட்டு ஒரு கல்லைத் துக்கிக் கிணற்றுக்குள் போட்டாராம். உடனே, தேசம் அந்த நாலு விரற்கடைத் தண்ணீரில் தலை கீழாக அமிழ்ந்து பிராணனை விட்டுவிட்டதாம்!

இதன் பலனாக கல்கியின் தகப்பனார் ஒருவராகன் தண்டம் கொடுக்கும்படி நேர்ந்ததாம். தகப்பனாரிடம் மூன்றரை ரூபாய்