பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான் ஒரு முஸ்லிம்

சொன்னால் நம்ப மாட்டீர்கள் பம்பாயில் வகுப்புக் கலவரம் நடைபெற்ற சமயம். ஒருநாள் இரவு சினிமா பார்த்து விட்டு நான் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்ப அனேகம் டாக்சிக்கரர்களை கூப்பிட்டேன்.

மாதுங்கா போக வேண்டு மென்றவுடன் “அங்கே போக வேண்டுமானால் ரொம்ப நேரமாகும். வழியில் கலகப் பிரதேசம் இருக்கிறது'கர்ஃப்யு'ஆர்டர்வேற இருக்கிறது. மணியோ ஒன்பது ஆகிவிட்டது.

ஆகையால் வர இயலாது. அப்படி வந்தாலும் யார் என்னைத் திருப்பிக் கொண்டுவந்து விடுவார்கள்? துணையில்லாமல் நான் தனியாக எப்படித் திரும்ப முடியும்? என்று ஒவ்வொரு டாக்சி டிரைவரும் சொல்லி விட்டார்.

நேரமாக ஆக எனக்கோ நெஞ்சு பக்பக் என்று அடித்துக்கொண்டது. ”சரி இன்று தீர்ந்தோம்” என்று முடிவு செய்து, ஞாபத்திற்கு வந்த சுவாமிகளை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு டாக்சிவந்தது. அந்த டிரைவரிடம் போய் அரைகுறை இந்துஸ்தானியில், ”மாதுங்கா போகவேண்டும்” என்று சொன்னேன். அவனும் பழைய கதையைத் திருப்பிச் சொன்னான்.

பிறகு நான் அவனிடம் கெஞ்சுதலாக, “நானும் ஒரு இந்து, நீயும் ஒரு இந்து. உதவி செய்ய வேண்டாமா?” என்றேன்.