பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திராவிட இயக்க எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களையும் காங்கரஸ் கட்சியையும் கேவலப்படுத்தும் திராவிடக்கழகத்தாரை எதிர்த்து போர் தொடுக்கும் வேலையை ஆரம்பித்தேன்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களும் நானும் இன்னும் சில நண்பர்களும் ஆலோசனை செய்து ஒரு மாபெரும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்துவது என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசீய தொண்டர்கள் அனைவரையும் திரட்டுவது என்றும் முடிவு செய்தோம்.

சென்னையில் இப்போது சத்தியமூர்த்திபவன் இருக்கும் இடம் அப்போது கட்டிடம் இல்லாமல் வெறும் காலி இடமாக இருந்தது. அந்த இடத்தில் மாபெரும் பந்தல் போடப்பட்டது. பந்தலுக்கு ‘கண்ணகி பந்தல்’ என்று பெயரிடப்பட்டது. முதல் நாள் ‘சிலப்பதிகார மாநாடு’ என்றும் மறுநாள் ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு’ என்றும் நடத்தப்பட்டது. -

சிலப்பதிகார மாநாட்டிற்குப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமை வகித்தார். மு. வரதராசனார் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டிற்கு திரு.ம.பொ.சி. தலைமை வகித்தார்.

இரண்டு நாள் மாநாட்டிலும், பூரா நாளும் இருந்து தலைவர் காமராஜ் ஆதரவு கொடுத்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமும் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்த தேசீயத் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு மாநாடு தைரியத்தையும் ஆவேசத்தையும் கொடுத்தது. அதன்பிறகு காங்கிரஸ் கூட்டங்கள்

சொ.ந-11