பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சொன்னால் நம்பமாட்டீர்கள்


போராட்டத்தை நடத்திய நீங்கள் குண்டரா- நான் குண்டாவா, இப்படிப்பட்டவர்களைக் காங்கிரசில் வைத்துக் கொள்ளலாமா? 1942 ஆகஸ்டில் தியாகம் செய்யாதவர்கள் காங்கிரசிற்கே வேண்டாம்” என்று பொரிந்து தள்ளினார்.

நான் அமைதியாகச் சொன்னேன். “ராஜாஜியை ஆகஸ்ட் “தியாகி இல்லை என்று சொல்லுகிறீர்கள். அதனால் என்ன, அவர் செப்டம்பர் தியாகி, அக்டோபர் தியாகி, நவம்பர் தியாகி, டிசம்பர் தியாகி-பல ஆண்டுகளாகப் பல மாதங்கள் தியாகம் செய்த பெரியவரை-சிறந்த அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை” என்றேன்.

காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலோர் வேண்டாம் என்று சொல்லும்போது நீ மட்டும் ஏன் கிறுக்கனாக இருக்கிறாய் என்றார். காந்தி கிறுக்கு-காந்தியடிகளை நம்பி காங்கிரசிற்கு வந்தவன். மகாத்மாஜி’ ராஜாஜியை வேண்டாம்’ என்று சொல்லவில்லையே, ராஜாஜியை ஏற்றுக் கொள்ளும்படிதானே “ஹரிஜன்” பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

நீங்கள் எல்லாம் ஏன் காந்திஜி பேச்சை மீறுகிறீர்கள்? காந்திஜிக்கு விரோதமான இக்காரியம் செய்யும் உங்களுடன் நான் ஒருக்காலும் ஒத்துழைக்கமாட்டேன். காந்தியடிகளின் விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிரசாரம் செய்வேன்” என்றேன்.

“சரி சரி போ-போய் அந்தக் கிழவனைக் கட்டிக் கொண்டு அழு” என்று சீறினார். நான் அமைதியாக வந்துவிட்டேன்.

அதன் பின்னர் “ராஜாஜி வேண்டும்” “வேண்டாம்” கிளர்ச்சி பெரிதாக நடந்தது. ராஜாஜியை காங்கிரஸ் உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அபுல்கலாம் அசாத்