பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

சொன்னால் நம்பமாட்டீர்கள்


கமிட்டித் தலைவராக இருந்த திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் வெகு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

எங்கள் இருவரைக் கண்டதும் கூட்டம் ஆரவாரத்துடன் கரகோஷம் செய்தது. “என்ன” வென்று தலைவர் காமராஜ் திரும்பிப்பார்த்தார். எங்கள் இருவரைப் பார்த்ததும் அவரும் ஒரு புன்னகை புரிந்து, திரு. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களைப் பார்த்து, -

“சரி சரி நிறுத்துங்க, அவங்க இரண்டு பேரும் வந்துட்டாங்க, இனி ஒங்க பேச்சு எடுபடாது” என்று சத்தம் போட்டுச் சொன்னார்.

கூட்டம் ‘கொல்’ என்று சிரித்தது.

தலைவரும் கலகலவென்று சிரித்தார். ‘சடக்கென்று நாயுடு அவர்கள் உட்கார்ந்தார், படக் கென்று என் கையைப்பிடித்து தலைவர் காமராஜ் எழுப்பிவிட்டார்.

நான் பேசும் கூட்டத்தில் காமராசர் இருந்தால், என் பேச்சைக் கடைசி வரையில் இருந்து கேட்டுரசிப்பார், சிரிப்பார் கைதட்டுவார்.

சேலத்தில் ஒரு சமயம் ஒரு மாபெரும் கூட்டம் தலைவர் காமராசருக்காகக் கூடியிருந்தது. அக்கூட்டத்தில் பேசுவதற்காக நானும் மேடையிலிருந்தேன். காமராசர் மேடைக்கு வந்ததும், மழைக்காற்று வீசிற்று.

அதை உணர்ந்த தலைவர் நேராக மைக் அருகில் வந்து நின்று, “மழை வரும் போலிருக்கிறது. அதனால் வேறு யாரும் பேசவேண்டாம்.