பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பகத்சிங் பாட்ஜ்

‘காந்தி’ என்றும் ‘காங்கிரஸ்’ என்றும் சொல்லிக்கொண்டு படிக்காமல் திரு. சா. கணேசன் அவர்களையே சுற்றித் திரிந்த என்னை என் தாய் மாமன் தம்முடன் மலேயாவிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரில் வட்டிக்கடை இருந்தது. அந்த ஊரிலிருந்த ஆங்கிலோ சைனீஸ் ஸ்கூலில் என்னைப் படிக்க வைத்தார்கள். நான்கு ஆண்டுகள் அந்தப் பள்ளியில் படித்தேன்

அந்தப் பள்ளிக்கூடத்தில் நிறைய சீன மாணவர்கள் படித்தார்கள். அச்சமயம் ஜப்பான் நாடு சீனாமீது அக்கிரமமாகப் படையெடுத்தது. ஜப்பானை எதிர்த்து சீன மாணவர்கள் எல்லோரும் ஊர்வலம் நடத்தினார்கள்.

என் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கிளர்ச்சி எண்ணம் வீரிட்டெழுந்தது. நானும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். ஜப்பான் சாமான்களையெல்லாம் தெருவில் போட்டுக் கொளுத்தினோம். கடைகளுக்குள் புகுந்து ஜப்பான் துணி மணிகளை எல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்தோம்.

போலீஸ் எங்களை அடித்து வளைத்துப் பிடித்தது. கூட்டத்தில் நானும் போலீஸ் மத்தியில் அகப்பட்டுக்கொண்டேன்.

மலேயாவில் அப்போது நிறைய பஞ்சாபி சீக்கியர்கள் போலீஸ்காரர்களாக இருந்தார்கள், அதிகாரிகள் மட்டும் ஆங்கிலேயர்கள்தான். ஒரு சீக்கியப் போலீஸ்காரர், சீன

சொ.ந.2