பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சொன்னால் நம்பமாட்டீர்கள்


கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். திரு. அண்ணாதுரை அவர்களின் பேச்சுப்பாணி மாணவர்களையும், இளைஞர்களையும் மிகவும் கவர்ந்தது. அதனால் இளைஞர் சமுதாயம் அவர்கள் பக்கம் சாய்ந்தது.

இவைகளைச் சமாளிக்க முடியாமல் இப்படி காங்கிரஸ் கட்சி திணறிக் கொண்டிருந்த போதுதான் நானும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் முன்வந்து திராவிட இயக்கத்தினருக்கு அவர்கள் பாணியிலேயே பதலடி கொடுத்து, காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தைரியமூட்டி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய வலிவும் பொலிவும் கொடுத்தோம். எத்தனையோ ஊர்களில் எங்களுக்கு கல்லடி, சொல்லடி, செருப்படி கிடைத்தது. எலக்ட்ரிக் பல்ப், செங்கல் முதலியவைகளை திராவிட இயக்கத்தினர் எறிந்தனர். கூட்டத்தில் விளக்குகளை அனைத்துக் கலகம் விளைவித்தனர்.

“வந்தேமாதரம்” என்று நாங்கள் சொன்னால், “அரகர மகாதேவா” என்று பதிலுக்கு திராவிட இயக்கத்தினர் ஊளையிட்டனர்.

இவ்வளவையும் திரு. ம.பொ.சி. அவர்களும் நானும் மற்றும் எங்கள் தோழர்களும் ஓரளவு சமாளித்து வெற்றி கண்டோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னையும் திரு.ம.பொ.சி. அவர்களையும் கருவேப்பிலையாக கருதினார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படாமல் கட்சி வேலையை பரபரப்பாகவே செய்து வந்தோம்.

எங்களைப் போல மக்களிடம் கூட்டங்களில் கவர்ச்சியாக, நகைச்சுவையாக, உணர்ச்சியாகப் பேசக் கூடியவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் வெறும் பேச்சாளர்களாகவே கட்சித் தலைவர்களால் மதிக்கப்பட்டோம்.