பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

191



அவர், “தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்த்தால் காங்கிரசிற்கு புதிய பலம் கொண்டு வரலாம்” என்று கூறினார்.

“மதுரையில் அப்படி எத்தனை மன்றங்கள் இருக்கின்றன?” என்று கேட்டேன். “இப்போது சுமார் 60 மன்றங்கள் இருக்கின்றன” என்றார். அவர் “முதலில் அவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டுங்கள். பேசிப் பார்ப்போம்” என்று சொன்னேன். “சரி” என்று திரு ஆனந்தன் மறுநாளே மதுரையிலுள்ள சிவாஜி ரசிகர் மன்றங்களை ஒரு இடத்தில் கூட்டினார். சுமார் 500 இளைஞர்கள் கூடினார்கள்.

அவர்களிடம் பேசியதில், “அதில் இந்திய ரீதியில் ஒரு சிவாஜி மன்றம் துவக்கி, இந்தியா முழுவதிலுள்ள சிவாஜி ரசிகர்களை ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டு வரலாம்” என்ற எண்ணம் உதயமாயிற்று. காங்சிரஸ் கட்சிக்கு நேரடியாக வரவிரும்பாத இளைஞர்கள் பலர், சிவாஜி ரசிகராக முதலில் சேர்ந்து அதிலிருந்து காங்கிரசிற்கு நிச்சயம் வருவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன்.

அதனால் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய இளைஞர்களைக் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையால்தான் 1969 ஆகஸ்டு மாதம் “அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கினேன்.

1969 அக்டோபர் முதல் தேதி அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 43வது பிறந்த தினவிழாவும், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற முதல் பேரவையும் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. அதற்குநடைபெற்ற ஊர்வலம் சென்னையில் புதிய சரித்திரத்தை உண்டாக்கியது.இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் அதற்கு வந்த வேகம்போல் வேறு