பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

சொன்னால் நம்பமாட்டீர்கள்



அவளுக்குச் சொந்த ஊரில் ஒரு பெரியம்மா, பெரியம்மாவின் மகளுக்குக் கலியாணம். மணப்பெண்ணுக்குப் போட சில நகைகள் தேவை. இந்த நகைகளைக் காட்டி அவர்களுக்குப் பிடித்தால் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். நகையை எடுத்துப் போக நண்பர் கையெழுத்துப் போட்டால் கடைக்காரர் சம்மதிப்பார். இதுதான் விஷயம் என்று காதலி சொன்னாள்.

‘பூ ஒரு கையெழுத்துத்தானே என்று நண்பர் மறு பேச்சு பேசாமல் கையெழுத்தைப் போட்டு விட்டு, நகையை வாங்கி அவளிடம் கொடுத்து விட்டார். அன்று முழுவதும் காதலி வீட்டில் ஒரே குதூகலம். நண்பருக்குக் கோலாகலம்.

அவள் சொன்னபடி தன் குடும்பத்தாருடன் பெரியம்மாவின் ஊருக்குப் புறப்பட்டுப் போனாள். அந்த ஊர் சென்னையிலிருந்து 400 மைல் தொலைவிலுள்ளது.

ஒருவாரம் கழித்துத் திரும்பி வந்தாள். குடும்பத்தினருடன் வந்தது தெரிந்து நண்பர் ஆர்வத்துடன் காதலியைக் காணச் சென்றார். நண்பரைக் கண்டதும் அந்த காதலியின் குடும்பத்தினர் அனைவரும் விம்மலும் விக்கலும் விசும்பலுமாக அழுகையுடன் கொண்டுபோன நகை திருட்டுப் போய்விட்டது என்று பிரலாபித்தார்கள். நண்பருக்குச் சந்தேகம் தோன்றி விட்டது.

அவர் எதுவும் பேசவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எப்போதும் போல் அந்த வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். நகை அவர்கள் வீட்டில்தான் இருக்கிறது என்பதும் நண்பருக்கு நிச்சயமாயிற்று.

இந்நிலையில் நகைக் கடைக்காரர் போலீசில் கிரிமினல் கம்பிளைண்ட் கொடுத்து விட்டார். நண்பர் அவர் அன்புக்-