பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

211


காதலியிடமும் அவள் குடும்பத்தாரிடமும் நிலைமை மோசமாகப் போகும், நகையைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று எவ்வளவோ மன்றாடினார். அவர்கள் சாதித்து விட்டார்கள்.

நண்பரிடம் அப்போது பணம் கைவசம் இல்லை. அதனால் நேராக என்னிடம் வந்து விஷயத்தைச்சொன்னார். நான் நண்பரை போலீஸ் கமிஷனரிடம் கூட்டிச் சென்றேன். உண்மையைச் சொன்னேன். நகை நிச்சயமாக அவர்கள் வீட்டில் தான் இருக்கிறதா? என்று கமிஷனர் கேட்டார்.

“ஆமா” என்றோம் அழுத்தமாக

உடனே ஒரு போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு அந்தப் பெண்ணின் வீட்டைச்சோதனை போடும்படி உத்தரவிட்டார்.

போலீஸ் அதிகாரி பெண்ணின் வீட்டிற்குப் போனதும் அவருக்கு ஏக உபசாரம் நடைபெற்றிருக்கிறது. வந்த விஷயத்தை அதிகாரி சொல்லியிருக்கிறார். “அதற்கென்ன நன்றாகப் பாருங்கள்” என்று அங்குள்ள பெண்கள் அனைவரும் குழைந்திருக்கிறார்கள்.

அதிகாரி வீட்டைச் சோதனை போட்டு விட்டு “நகைகள் ஒன்றும் இல்லை” என்று வந்து விட்டார்.

மேற்படி அதிகாரி உஷாரானவர்தான். எதற்கும் மசியக்கூடியவரல்ல. இருந்தும் அவர் ஏமாந்து விட்டார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.

போலீஸ் கமிஷனரிடம் நான் வாதாடினேன். கமிஷனர் எங்களுக்காக மிகவும் பரிதாபப்பட்டார். இரண்டு நாள் தவணை கொடுங்கள். நான் கண்டு பிடித்துச் சொல்கிறேன்” என்று அவரிடம் தவணை வாங்கிக் கொண்டு சென்றேன்.