பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“தங்கள் பேச்சைக் கேட்க எவ்வளவோ பேர் தவம் கிடக்கிறார்கள். வலிய வரும் சீதேவியை இழந்து விடுவேனா? என்று சொல்லி அவருடன் பிரயாணத்தைத் துவங்கினேன். ரயில் நகர ஆரம்பித்ததும் “தங்களிடம் முதல் வகுப்பு டிக்கட் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“வித் அவுட்டில் வருவதாக நினைத்துவிட்டீர்களா?” இதோ எனது முதல் வகுப்பு டிக்கட்” என்று டிக்கெட்டைக் காண்பித்தேன்.

‘என் தம்பிமார்களில் சிலர் இப்படி என்னுடன் ஏறிக்கொண்டு அந்தத் தைரியத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்ததுண்டு. அவர்களுக்காக நான் டிக்கட் வாங்கிவிடுவது வழக்கம்” என்றார்.

“நான் உங்களை நம்பிப் பிரயாணம் செய்பவனில்லையே” என்றேன்.

“நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது. திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார்.

“ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்’ என்றேன்.

‘ரொம்பத் தாக்கிப் பேசினீர்களோ?’ என்று சொல்லிவிட்டு, “நீங்க தாக்கிப் பேசினாலும் நானும் என் தம்பிமார்களும் கோபப்படுவதில்லை. ஏனென்னறால் அதிலுள்ள நகைச்சுவை எங்களைச் சிரிக்க வைத்து விடுகிறது.” என்றார்.

“வஸிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம்” என்றேன். “அது சரி. திமுக ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று ஒரு எக்கச்சக்கமான கேள்வியைக்