பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சொன்னால் நம்பமாட்டீர்கள்



மணமகளை அதுவரையில் மணமகன் பார்த்திருக்க மாட்டான். பெண் எடுக்கிக் காட்டும் சடங்கிற்கு மணமகன் குதிரைமேல் மணப்பெண் வீட்டுக்குச் செல்வான்; மணமகள் வீட்டு வாயிலின் முன் மணமகன் வந்ததும் மணப் பெண்ணின் அத்தை மணப்பெண்ணை அழைத்து வந்து (தூக்கிக்) காட்ட வேண்டும்.

அப்போதுதான் மாப்பிள்ளை பிள்ளையாண்டான் தனது வருங்கால வாழ்க்கைத் துணைவியைப் பார்க்க நேரும். ஏனெனில் மணப்பெண் தன் கைகளால் முகத்தை வேறு மூடிக்கொள்ளுவாள். அவள் கையை முகத்திலிருந்து எடுக்க பலர் முயற்சிப்பபார்கள், பாதி முகத்தைப் பார்த்தும் பாராமலும் தன் விதியை நொந்துகொண்டு மணமகன் திரும்ப வேண்டியதுதான்.

எனக்கும் இதே பாணியில்தான் திருமணம் நடந்தது. திருமணம் எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து என் அன்னை இன்று உன் பெண்டாட்டியுடன் போய் பேசிக் கொள் என்று சொல்லி என்னைப் பள்ளி அறைக்கு அனுப்பினார்.

நானும் சரி என்று என் மனைவியுடன் பேசப்போனேன். என் மனைவி அப்போது நல்ல தூக்கத்தில் இருந்தாள். அவளுக்கு வயது 12 தானே?

அவள் தூங்கும்போது நான் மட்டும் ஏன் விழித்திருக்க வேண்டும்? ஆகவே நானும் விழுந்து தூங்கினேன். எனக்கும் அப்போது வயது 13 தானே! அன்று தூங்கியதற்குப் பிராயச்சித்தமாக அதன் பிறகு எனக்காக என் மனைவி பல இரவுகள் கண் விழித்து, கண் கலங்கியிருக்கிறாள் காரணம் என்னுடைய அரசியல்தான்!

பல நாட்கள் நான் பொதுக்கூட்டம் என்றும் மாநாடு என்றும் போய்விட்டு இரவு 11 மணி 12 மணி 2 மணி என சில சமயம்