பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

25



“அது சரி சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

நான் பளிச்சென்று, “என் மனைவியின் நகைகளை விற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன்.

இதை டாக்டர் ராஜன், ராஜாஜி அவர்களிடம் சொல்லி விட்டார். ராஜாஜிக்கு அப்போதுதான் என் நிலைமை புரிந்தது. ராஜாஜி மறுநாள் என் வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் “இனிமேல் நகைகளை விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு போனார். அன்றிலிருந்து என் மனைவி எந்த நகையையும் விற்காமல் மிஞ்சியதைப் பத்திரப்படுத்திவிட்டாள்.

அவள் இறக்கும்போது, பத்திரப்படுத்திய அந்தநகைகளை என்னிடம்கொடுத்து, “இது ராஜாஜியால் தான் மிஞ்சியது. அவர் நினைவாக இதைப் பத்திரமாக வைத்திருங்கள்” என்று சொன்னாள்.

இன்றும் அந்த நகைகள் ராஜாஜியின்நினைவாக என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதில் என் மனைவி உமையாளின் நினைவும் பூரணமாக இருக்கிறது.