பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதல் சொற்பொழிவு

தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது வகுப்பு மாணவர்கள் கூட்டம் ஒவ்வொரு வாரக் கடைசியில் நடக்கும். வாரத்திற்குச் சில மாணவர்கள் வீதம் பகிர்ந்துகொண்டு குறிப்பிடப்பட்ட விசயத்தைப்பற்றிச் சுருக்கமாகத் தமிழில் பேசவேண்டும். கட்டாயமாக எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு வாரத்தில் பேச வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கும் ஒரு வாரம் வந்தது.

எப்போதும் பேசவேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு வாரம் முன்பே ஆசிரியர் அறிவித்து விடுவார்.

நான் பேச வேண்டிய அந்த வாரத்தின் பொருள் ‘செல்வம்’ என்பதாகும். என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. இதற்கு முன் நான் எந்தக் கூட்டத்திலும் பேசியதுமில்லை. ஒரே குழப்பமாக இருந்த நேரத்தில் எங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரிலிருந்த ‘ஹரிஜன ரெங்கண்ணா’ அவர்களின் இல்லத்திற்கு எப்போதும் போல் சென்றேன்.

திரு ரெங்கண்ணா அவர்கள் அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஹரிஜன சேவை செய்து வந்ததனால் “ஹரிஜன ரெங்கண்ணா” என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.

அவர் என்னிடம் ரொம்ப அன்பு கொண்டவர். சிறு வயதிலே நான்'காந்தி’ ‘காங்கிரஸ்’ என்று பேசுவதைக் கேட்பதில்